ஒரு பொருளின் விலை எப்படி சப்ளை மற்றும் டிமாண்ட் மத்தியில் இருக்கும் வேறுபாடு முடிவு செய்கிறதோ, இதேபோல் ஒரு குடும்பத்தின் சேமிப்பு அளவு என்பது வருமானத்தில் ஏற்படும் உயர்வும், விலைவாசியும் தான் நிர்ணயம் செய்கிறது.
இந்த நிலையில் இந்திய குடும்பங்களின் சேமிப்பு என்பது 30 வருட சரிவை எட்டியுள்ளது.
விலைவாசி உயர்வு
உற்பத்தி பொருட்கள் முதல் பேகேஜிங் பொருட்கள் முதல் அனைத்தும் விலை அதிகரித்துள்ளதால் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் இந்த விலை சுமையை பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலம் தீர்த்துள்ளது.
மக்கள் நிலை
இதனால் மக்கள் தானாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதில் முக்கியமான பாதிப்பு நிறுவனங்களுக்கு என்னவென்றால் வர்த்தகமாகும் அளவு குறைகிறது, உதாணமாக ஒரு மாதத்திற்கு 10 லட்சம் டூத்பேஸ்ட் விற்பனை செய்யப்பட்டால் தற்போது 7- 8 லட்சம் டூத்பேஸ்ட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் நுகர்வு அளவுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
வருமானம்
இதேவேளையில் பெரும்பாலான மக்களின் வருமானம் பெரிய அளவிலான உயர்வை கடந்த 3 ஆண்டுகளில் ஏற்படவில்லை, சராசரியாக பதிவான 10 - 12 சதவீத வருமான உயர்வும் விலைவாசி உயர்வால் மாயமாகியுள்ளது. இதன் விளைவாக இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு 30 வருட சரிவை எட்டியுள்ளது.
K வடிவ பொருளாதார மீட்சி
இது இந்தியா பொருளாதாரத்தின் K வடிவ பொருளாதார மீட்சியை காட்டுகிறது. இதேவேளையில் நாட்டில் பணவீக்கம் குறையாமல் இருக்கும் காரணத்தால் ஆர்பிஐ தொடர்ந்து அடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
Nuvama Institutional Equities வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவுக்கு பிந்தை பொருளாதார வளர்ச்சி என்பது சிறப்பாக இருந்தாவும், மொத்தமாக கணக்கிட்டால் மோசமாகவே உள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில்லறை பணவீக்கம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்தது. இது டிசம்பர் மாதம் 5.72 சதவீதமாகவும், நவம்பர் மாதம் 5.88 சதவீதமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் 2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் மொத்த பணவீக்கத்தின் சாராசரி அளவு 7.2 சதவீதம், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கொரோனாவுக்கு முன்பு 5.8 சதவீதமாக உள்ளது.
இந்திய பொருளாதாரம்
இது மட்டுமே மக்களின் நிலை எந்த அளவுக்கு பாதித்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இந்திய குடும்பங்களின் மொத்த சேமிப்பு அளவு முதல் அரையாண்டில் ஜிடிபியில் 15 சதவீதம் சரிந்துள்ளது, இது 30 வருட சரிவாகும்.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு
இந்திய குடும்பங்களின் சேமிப்பு என்பது ஒரு குடும்பத்தின் செலவழிப்பு வருமானத்திற்கும், பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான அதன் நுகர்வுக்கும் உள்ள வித்தியாசம். குறைந்த குடும்ப சேமிப்பு விகிதத்தைக் கொண்ட பொருளாதாரத்தில் உள்நாட்டில் அதன் முதலீட்டுத் தேவைகளுக்கு நிதியளிக்க முடியாமல் போகும் என்பதால் குடும்பங்களின் சேமிப்பு முக்கியமானது.


Click it and Unblock the Notifications