இந்தியாவின் தொழில் துறை உற்பத்தியானது 4.3% ஆக கடந்த டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்தில் 7.3% ஆகவும் இருந்தது.
இது குறித்தான வெளியான தரவில், தொழில்துறை உற்பத்தியானது டிசம்பர் 2021ல், 1% அதிகரித்து காணப்பட்டது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரிய வந்துள்ளது.
உற்பத்தி தரவு
இந்தியாவின் உற்பத்தி குறித்தான தரவானது டிசம்பர் 2022ல் 2.6% ஆக இருந்தது. இதே சுரங்க உற்பத்தி குறித்தான தரவானது 9.8% ஆக அதிகரித்துள்ளது. இதே மின்சாரம் துறையில் வளர்ச்சியானது 10.4% வளர்ச்சியானது அதிகரித்துள்ளது.
பயன்பாட்டு அடிபப்டை
பயன்பாட்டு அடிபப்டையிலான பிரிவின் படி, டிசம்பர் மாதத்தில் முதன்மை பொருட்களுக்கான குறியீடு 144.08 ஆகவும், இதே மூலதன பொருட்களுக்கு 100 ஆகவும், இடை நிலை பொருட்களுகான மதிப்பு 151.3 ஆகவும் அல்லது கட்டுமான பொருட்களுக்கு 166.6 ஆகவும் உள்ளதாக அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொழில்துறை உற்பத்தி
இதே நீடித்த நுகர்வோர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத பொருள்களுக்கான குறியீடுகள் இந்த மாதத்திற்கு முறையே 109.7 மற்றும் 173.2 ஆக உள்ளது.
இதே ஏப்ரல் - டிசம்பர் 2022ல் நாட்டின் தொழில்துறை உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு, 5.4% வரையில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2022ம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 15.3% ஆக உள்ளது.
வீழ்ச்சி கண்ட துறைகள்
கடந்த டிசம்பர் மாதத்தில் 23 துறைகளில் 11 துறைகள் வீழ்ச்சியினை கண்டுள்ளன. இதில் கணினிகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிகல் பொருட்கள் (-.37%), ஜவுளிகள் (-21.9), புகையிலை பொருட்கள் (-12.1), டெக்ஸ்டைல்ஸ் (-11.9), தோல் பொருட்கள் (-11.6) சரிவினை கண்டுள்ளன.
வளர்ச்சி கண்ட துறைகள்
பார்மா பொருட்கள் 16% வளர்ச்சியும், மீடியா 13.6% அளவும், மோட்டார் வாகனங்கள் 11.6% ஆகவும், மெஷினரி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியானது 10.9% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கான வளர்ச்சி விகிதமானது, 5 - 7% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications