இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி விகிதமானது கடந்த ஜூலை மாதத்தில் 10.4% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே முந்தைய ஆண்டில் வளர்ச்சியானது 4.9% ஆக வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறைந்த உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்தி சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் இந்த குறியீடானது சரிவினைக் கண்டுள்ளது.

இந்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் படி, உற்பத்தி துறை குறித்தான குறியீடு 11.1 சதவீத வீழ்ச்சியுடனும், இதே சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்தி குறித்தான குறியீடு முறையே 13 சதவீதம் மற்றும் 2.5 சதவீதமாகவும் சரிந்துள்ளது.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் இறுதி முதல் லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் தொழில்துறை வளர்ச்சியானது பெரும் வீழ்ச்சி கண்டது. எனினும் இந்த தொழில் துறை வளர்ச்சி குறித்தான குறியீடுகள், இனி வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரும் மாதங்களில் இந்த வளர்ச்சியானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே 2020 - 21ம் நிதியாண்டில் தொழில் துறை வளர்ச்சியானது 29.2 சதவீதம் வளர்ச்சி காணும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.5 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது.
இது குறித்தான அறிக்கையில் ஜூலை மாதத்தில் உற்பத்தி துறை குறித்தான வளர்ச்சி 11.1% வீழ்ச்சி கண்டு, 118.8 ஆக சரிந்துள்ளது. இதே சுரங்கத் துறையில் வளர்ச்சி 13 சதவீதம் சரிந்து 87.2 ஆகவும், மின்சார துறை வளர்ச்சியானது 2.5 சதவீதம் குறைந்து, 166.3 ஆகவும் சரிந்துள்ளது.
இதுவே முந்தைய மாதங்களான ஜூன் மாதத்தில் இந்த தொழில் துறை குறியீடு 16.6 சதவீதம், இதே மே மாதத்தில் 33.8 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் 57.6 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டிருந்தது.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சில முக்கிய துறைகள் தவிர, அனைத்து துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் தற்போது அரசு சில துறைகளில் ஊக்குவிப்புகளை அறிவித்து வரும் நிலையில், இதனுடன் லாக்டவுன் தளர்வும், இனி அடுத்து வரும் மாதங்களில் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications