இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாக உயர்ந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கணித்தப்படியே கணிசமாக குறைந்துள்ளது, இதேபோல் ஏற்கனவே கூறியபடி ஆர்பிஐ இலக்கை விடவும் அதிகமாகவே உள்ளது.
ஜூலை மாதம் பணவீக்கம் அதிகமாக இருக்க முக்கிய காரணம் தக்காளி, வெங்காயம், மிளகாய் விலை உயர்வு. இது ஆகஸ்ட் மாதத்தில் வேகமாக குறைந்து தற்போது ஒரு கிலோ தக்காளி 10 முதல் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் தாக்கம் கட்டாயம் ஆகஸ்ட் மாத தரவுகளில் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டது.

CPI எனப்படும் ரீடைல் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாக உயர்ந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகிறது. மேலும் தானியங்களின் விலை உயர்வால் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
உணவு விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக குறைந்துள்ளது, இது ஜூலை 2023 இல் 11.51 சதவீதமாக இருந்தது மறக்க முடியாது. இதோடு கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த ரீடைல் பணவீக்கம் 7.02 சதவீதம், இதேபோல நகர்ப்புறங்களில் ஒட்டுமொத்த ரீடைல் பணவீக்கம் 6.59 சதவீதமாக உள்ளது.
அதே நேரத்தில் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் உணவு விலை பணவீக்கம் 9.67 சதவீதம் மற்றும் 10.42 சதவீதமாக உள்ளது, கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 6.83 சதவீதமாக பதிவாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜூலை மாதம் பருவகால ஏற்ற இறக்கங்களால் உணவுப் பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கும் வரும் உணவு பொருட்களின் அளவு குறைந்து சப்ளை டிமாண்ட் காரணமாக விலை உயர்ந்து இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.4 சதவீதமாக உயர்ந்தது.
இதேபோல் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஐஐபி அளவு ஜூன் 2023 இல் 3.7 சதவீதமாக இருந்தது என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவுகளை கணிக்கும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (IIP) அளவு ஜூலை 2022ல் 2.2 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை 2023ல் 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஜூலை மாதம் சுரங்க உற்பத்தி 10.7 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டில் -3.3 சதவீதமாக இருந்தது. உற்பத்தித் துறை ஜூலை 2022 இல் 3.1 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜூலையில் 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் மின் உற்பத்தியில் ஜூலை 2023 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது, கடந்த ஆண்டு வெறும் 2.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை தாண்டி கேப்பிடல் கூட்ஸ் 4.6 சதவீதம், நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் உற்பத்தி 2.7 சதவீதம், கட்டுமான துறை 11.4 சதவீதம் என தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications