ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை கையில் வைத்திருந்தாலே தனி கெத்து கிடைக்கும். அப்படி பிரீமியம் அனுபவத்தை வழங்க கூடிய ஐபோன்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது.
உலகில் பயன்படுத்தப்படும் ஐபோன்களில் ஐந்தில் ஒரு ஐபோன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. உலக அளவில் பலரது விருப்பமான ஒரு ஸ்மார்ட் போன் பிராண்டாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு முறை ஐபோன்களின் புதிய பதிப்புகளை வெளியிடும் போதும் உலகின் கவனம் முழுவதுமே அதன் மீது தான் இருக்கும். ஆப்பிளின் ஐபோன்களுக்கென்றே உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள், ஐபேட்கள், ஐ வாட்ச்கள், மேக் கணினிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது. ஆனால் இவற்றை பெரும்பாலும் சீனாவில் தான் உற்பத்தி செய்கிறது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களை பெரும்பாலும் சீனாவில் தான் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பை ஆப்பிள் சந்தித்தது.
எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என முடிவு செய்து ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவை நோக்கி திருப்பியது. அந்த வகையில் இந்தியாவில் ஃபாக்ஸ் கான் மற்றும் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆலைகளை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கி வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களின் ஐபோன் உற்பத்தி ஆலைகளும் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது தமிழ்நாட்டுக்கு மற்றொரு பெருமை.
அந்த வகையில் கடந்த 12 மாத காலத்தில் மட்டும் இந்தியாவில் 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 60% அதிகம் என ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்திருப்பதையே இது காட்டுகிறது.
கடந்த 12 மாத காலத்தில் மட்டும் 22 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது மட்டுமில்லாமல், 17.4 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்திருக்கிறது என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் தெரிவிக்கிறார். ஐபோன்கள் உற்பத்தி மையமாக இந்தியா மாறி வருகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் உற்பத்திக்கு சீனாவை சார்ந்திருக்கும் போக்கு குறைந்திருக்கிறது. தற்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்திருப்பதால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஐபோன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம். இது இந்தியாவிற்கும் இந்திய உற்பத்தி துறைக்கும் மிகப்பெரிய அளவில் சாதகமாக அமையும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்திக்கு மட்டுமல்ல ஐபோன்கள் விற்பனைக்கும் முக்கியமான ஒரு சந்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே ஐபோன்களை தயாரித்து இந்தியாவிலேயே விற்பனை செய்வது ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிய லாபமாக இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் இது 8% தான் என்றாலும் ஆண்டுதோறும் இது அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆப்பிள் நிறுவனம் முதலில் இந்தியாவில் பேசிக் ஐபோன் மாடல்களை மட்டுமே உற்பத்தி செய்தது. ஆனால் தற்போது தன்னுடைய உற்பத்திப் போக்கையும் மாற்றிக் கொண்டிருக்கிறது. அதாவது தங்களுடைய பிரீமியம் ரக போன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டது. எனவே ஐபோன்கள் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதையே இது காட்டுகிறது.
மத்திய மாநில அரசுகளும் இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகம் இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கு 2.7 மில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட் போன் உற்பத்தியும் அடங்கும் என்பதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது சாதகமாக அமைந்திருக்கிறது.
தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைத்திருக்கும் ஐபோன் உற்பத்தி ஆலையை போலவே உத்தரபிரதேச மாநிலத்திலும் புதிதாக ஒர உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இது தவிர பெங்களூருவிலும் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரண்டு மடங்காக அதாவது 25 லிருந்து 30 மில்லியன்களாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது ஃபாக்ஸ் கான். அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஆலைகள் விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது.ஆப்பிள் நிறுவனம் ஐபோன்கள் மட்டுமில்லாமல் தங்களின் கருவிகளுக்கு தேவையான முக்கிய உபகரணங்கள் உற்பத்தியையும் இந்தியாவில் அதிகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மதர் சன் குழுமம், ஜபில், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ,வாட்ச் , மேக் புக் உள்ளிட்டவற்றுக்கு தேவையான முக்கிய உபகரணங்களை இந்தியாவில் உற்பத்தி செய்கின்றன.
தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த உபகரணங்கள் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருக்கக்கூடிய ஐபோன் ஒருங்கிணைப்பு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு போன்களாக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் மின்னணு சாதனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கான உபகரணங்களை இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்வதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. தற்போதைக்கு ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை தங்களுடைய உற்பத்தி மற்றும் விநியோக சங்கலியை பாதிக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளையும் தவிர்க்கவே விரும்புகிறது. எனவே தான் ஐபோன் உற்பத்தியிலும் ஐபோன் உபகரணங்கள் உற்பத்தியிலும் இந்தியாவுக்கு முக்கிய இடம் தர முன் வந்துள்ளது. அரசின் திட்டங்களும் இதற்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளதால் இந்திய உற்பத்தி துறைக்கு இது முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஒரு முறை சார்ஜ் போட்டா 40 மணி நேரம் நீடிக்கும்: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபோன் 18..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications