சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் டெக் துறையில் மிக மோசமான பணி நீக்கம் என்பது இருந்து வருகின்றது. இந்தியாவிலும் சில ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் என்பது செய்துள்ளன. இந்த நிலையானது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
எனினும் டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒரு சூப்பரான அப்டேட்டினை கொடுத்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
பணி நீக்கம் இருக்காது?
டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு பணி நீக்கம் என்பது இருக்க வாய்ப்பில்லை. எனினும் விரைவில் சம்பள அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு என்பது வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்கம் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஒரு ஊழியரை பணியில் அமர்த்தியதும் நீண்டகால திறமைகளை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக பணி நீக்கம் என்பது இல்லை. அதே சமயம் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் சம்பள உயர்வானது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு?
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தில் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் நிறுவனம், முந்தைய ஆண்டுகளை போல ஊழியர்கள் ஊதிய உயர்வுகளை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் ஆதரவுடைய நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களில் 2197 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்திலும் இப்படி ஒரு நிகழ்வு வருமோ என்ற அச்சத்தில் இருந்த ஊழியர்களுக்கு, இது பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது எனலாம்.
நினைத்து கூட பார்க்க முடியவில்லை
பொதுவாக ஐடி ஊழியர்கள் மத்தியில் சம்பள உயர்வு என்பது இல்லாவிட்டாலும், தங்களது வேலை இருந்தால் போதும் என்ற மன நிலையே பல தரப்பினர் மத்தியிலும் இருந்து வருகின்றது. ஏனெனில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தேவையானது கடும் சரிவினைக் கண்டுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச டெக் ஜாம்பவான்கள் ஆன, கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ட்விட்டர், மெட்டா என பல நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன. ஆக அப்படி இருக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு என்பது இந்த சமயத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம்
ஆக இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் பணி நீக்கம் என்பதும் இல்லை. அதே சமயம் சம்பள அதிகரிப்பு என்பது இருக்கும் என கூறி, டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில் மற்ற நிறுவனங்கள் ஏன் பணி நீக்கம் செய்கின்றன என்பது குறித்து விளக்கமளித்துள்ள நிறுவனம், தேவைக்கு அதிகமாக நிறுவனங்கள் பணியமர்த்தியுள்ளன. ஆக தற்போது தேவையும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன என விளக்கம் கொடுத்துள்ளது.
பணியமர்த்த திட்டம்
ஒரு முறை ஊழியர் நிறுவனத்தில் இணைந்துவிட்டால், அவரின் திறனை அதிகரிக்க வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும். தேவைப்படும் திறன் மற்றும் ஊழியரின் திறனுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் ஸ்டார்ட் அப்கள் பணி நீக்கம் செய்யும் ஊழியர்களை, டிசிஎஸ் பணியமர்த்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பு
டிசிஎஸ் நிறுவனம் பல்வேறு தொழில்களில் பல்வேறு தொழில் நுட்ப சேவைகளை செய்து வருகின்றது. இதற்காக நிறுவனத்திற்கு திறமையான ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஆக அவர்களை ஸ்டார்ட் அப்களில் இருந்து பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.
சில திறமைசாலிகள் ஸ்டார்ட் அப்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அவற்றை, நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் லக்காட் தெரிவித்துள்ளார்.
4வது காலாண்டில் எப்படி?
முன்னதாக கடந்த காலாண்டில் பணி நீக்கம் இருக்குமா? அல்லது பணியமர்த்தல் இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் எதுவும் கூறப்படாத நிலையில், 4வது காலாண்டில் பணியமர்த்தல் என்பது முடக்கப்படலாம். அப்படி இல்லாவிட்டாலும் இரண்டு ஆயிரம் என்பது கூடுதலாக இருக்கலாம் என லக்காட் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications