இந்தியப் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த பின்பு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவு பதிவாகியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் நாட்டின் வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் 3 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நவம்பர் மாதம் பல முன்னணி டெக் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் பலவீனமான ஏற்றுமதி மற்றும் முதலீடுகள் வேலைவாய்ப்பு சந்தையைப் பாதித்துள்ளதாகத் தெரிகிறது.
வேலைவாய்ப்பின்மை அளவு
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவு நவம்பர் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 8.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதத்தில் நவம்பர் மாத அளவீடுகள் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. CMIE அமைப்பின் தரவுகள் படி அக்டோபர் மாதம் 7.77 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை அளவீடு, நவம்பர் மாதம் 8.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகரம் - கிராமம்
இதில் முக்கியமான நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 8.96 சதவீதமாக உள்ளது. அக்டோபர் மாதம் இதன் அளவு வெறும் 7.21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஊரகப் பகுதியில் நவம்பர் மாத வேலைவாய்ப்பின்மை அளவீடு 7.55 சதவீதமாகச் சரிந்துள்ளது. அக்டோபர் மாதம் 8.04 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பணிநீக்கம்
இதன் மூலம் நவம்பர் மாதம் கிராமம் மற்றும் ஊரகப் பகுதியைக் காட்டிலும் நகரங்களில் தான் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் பாதித்துள்ளது. கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியா தரவுகள்
இந்த நிலையில் நவம்பர் மாதம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தின் விபரங்கள்
ஹரியானா - 30.6 சதவீதம்
ராஜஸ்தான் - 24.5 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 23.9 சதவீதம்
பீகார் - 17.3 சதவீதம்
திரிபுரா - 14.5 சதவீதம்
ஜார்கண்ட் - 14.3 சதவீதம்
அசாம் - 14 சதவீதம்
கோவா - 13.6 சதவீதம்
டெல்லி - 12.7 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 9.1 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் - 8.1 சதவீதம்
பஞ்சாப் - 7.8 சதவீதம்
மத்திய பிரதேசம் - 6.2 சதவீதம்
தெலுங்கானா - 6 சதவீதம்
கேரளா - 5.9 சதவீதம்
மேற்கு வங்காளம் - 5.4 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 4.1 சதவீதம்
தமிழ்நாடு - 3.8 சதவீதம்
மகாராஷ்டிரா - 3.5 சதவீதம்
புதுச்சேரி - 2.9 சதவீதம்
குஜராத் - 2.5 சதவீதம்
மேகாலயா - 2.1 சதவீதம்
கர்நாடகா - 1.8 சதவீதம்
ஒடிசா - 1.6 சதவீதம்
உத்தரகாண்ட் - 1.2 சதவீதம்
சத்தீஸ்கர் - 0.1 சதவீதம்
இந்தியா vs தமிழ்நாடு
நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 8 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை வெறும் 3.8 சதவீதமாக இருக்கிறது.
தமிழ்நாட்டை விடவும் மகாராஷ்டிரா (3.5 சதவீதம்), புதுச்சேரி (2.9 சதவீதம்), குஜராத் (2.5 சதவீதம்), கர்நாடகா (1.8 சதவீதம்) ஆகிய முக்கியமான பொருளாதார மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டு
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் சுமார் 13.5 சதவீதம் என்ற சிறப்பான ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இதன் அளவு 6.2 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications