டெல்லி: உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது.
நடப்பு காரீப் பருவத்தில் இந்தியாவின் அரிசி உற்பத்தியானது 10 - 12 மில்லியன் டன் வரையில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இந்தியாவின் பல முக்கிய பகுதிகளிலும் பெய்து வரும் கன மழைக்கு மத்தியில், பயிர்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன. இது இப்படி நடப்பு காரீப் பருவத்தின் தொடக்கத்தில் மழை இல்லாத நிலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அரிசி ஏற்றுமதிக்கு தடை
இதன் காரணமாக நடப்பு பருவத்தில் உற்பத்தியானது மோசமாக பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விலையேற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் மத்திய அரசு உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அதுமட்டும் அல்ல பாசுமதி அல்லாத அரிசிக்கு 20% வரி விதித்துள்ளது.
விலை அதிகரிப்பு
வெளிநாட்டு வர்த்தக வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையின் படி, உடைத்த அரிசியின் ஏற்றுமதியின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாட்டின் தேவையானது அதிகரித்து வரும் இந்த சூழலில், சப்ளையில் தாக்கம் உள்ளது. இதற்கிடையில் மொத்த விலை சந்தையில் விலையானது 8% அதிகரித்துள்ளது. இதே ரீடெயில் சந்தையில் விலை 6% அதிகரித்துள்ளது.
உற்பத்தி சரிவு
பல மாநிலங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் நெல் சாகுபடியானது 38 லட்சம் ஹெக்டேர் வரையில் குறைந்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. காரீப் பருவத்தில் இந்தியாவில் மொத்த அரிசி உற்பத்தியில் 80% பங்களிப்பை வழங்குகிறது. இதற்கிடையில் இந்த காரீப் பருவத்தில் சுமார் 10 மில்லியன் டன் அரிசி உற்பத்தி இழப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 12 மில்லியன் டன் வரையில் அதிகரிக்கலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி நிலவரம்
இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தி 2021 - 22 பருவத்தில் (ஜுலை - ஜுன்) 130.29 மில்லியன் டன்னாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 124.37 மில்லியன் டன்னாக இருந்தது.
2021 - 22ம் ஆண்டின் மொத்த அரிசி உற்பத்தியில் 111.76 மில்லியன் டன் காரீப் பருவத்திலும், 18.53 மில்லியன் டன் ராபி பருவத்திலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஏற்றுமதி
கடந்த 2021 - 22ம் நிதியாண்டில் 21.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் 3.94 மில்லியன் டன் பாசுமதி அரிசியினை ஏற்றுமதி செய்துள்ளது.


Click it and Unblock the Notifications