இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று கூறியுள்ள சுனில் பார்தி மிட்டல், தற்போது மிக உற்சாகமான கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிசினஸ் டுடே @100 உச்சி மாநாட்டில் பேசிய சுனில் மிட்டல், இந்தியா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
எப்படியோ இந்தியாவுக்கு எல்லாம் நல்ல முறையில் சீரமைக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன் என்று சுனில் மிட்டல் கூறியுள்ளார்.
சீனாவை போல எப்போது?
சீனாவினை போல கட்டமைப்பினை உருவாக்குவதற்கு 20 - 30 ஆண்டுகள் ஆகும். அதே நேரம் சாலை மேம்பாட்டினை துரிதமாக செயல்படுத்தி வருகின்றோம். புதிய விமான நிலையங்களை அமைத்து வருகிறோம். பல புதிய புதிய விஷயங்கள் வருகின்றன. எனினும் அது முழுமையாக நிறைவடைய சில காலம் ஆகும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. ஆக இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.
டிஜிட்டல் கட்டமைப்பு
இங்கு செய்ய வேண்டிய் பணிகள் ஏராளம் உள்ளன. டிஜிட்டல் கட்டமைப்பு இங்கேயும் உள்ளது. இந்தியா 3.1 டிரில்லியன் பொருளாதாரமாக உள்ளது. இது 2027ல் 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற முயற்சி செய்து வருகின்றது. இதில் குறிப்பாக 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக திட்டமிடப்பட்டு வருகின்றது. நாட்டில் டிஜிட்டல் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கமும் திட்டமிட்டு வருகின்றது.
வெளியேறிய நிறுவனங்கள்
ஆரம்ப காலத்தில் தொலைபேசி உற்பத்தியினை தொடங்கிய மிட்டல், இந்தியாவின் உற்பத்தி துறையினை நீண்டகாலமாக கவனித்து வருகின்றார். 90 -களில் பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியினை தொடங்கின. எரிக்சன் இங்கே உற்பத்தியினை தொடங்கியது. நோக்கிய உற்பத்தியினை தொடங்கியது. ஆனால் அவற்றில் பலவும் 5 ஆண்டுகள் கழித்து நாட்டை விட்டு வெளியேறின.
இந்தியாவின் இழப்பு சீனாவுக்கு லாபம்
இந்தியாவின் இழப்பு சீனாவுக்கு லாபமாக மாறிவிட்டது. நாம் அந்த சமயத்தில் உற்பத்தியில் இருந்து மெதுவாக விலகிச் செல்ல ஆரம்பித்தோம். எனினும் அரசு தற்போதைய காலகட்டங்களில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்து வருகின்றது. முதலீடுகளை ஊக்குவித்து வருகின்றது. இதனால் லட்சக் கணக்கான கோடி முதலீடுகள் குவிந்து வருகின்றன. இது எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியினை இன்னும் அதிகரிக்கும்.
எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி
2014ம் ஆண்டில் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி எதுவும் இல்லை, ஆனால் இன்று எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியானது 80 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ளது. இன்று எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையானது 80 பில்லியன் டாலருக்கு அருகில் உள்ளது. இங்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரிகின்றனர்.
இந்தியாவுக்கு சாதகமான விஷயம்
தற்போது பல சர்வதேச நாடுகளிலும் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நிறுவனங்கள் நம்பகமான, பாதுகாப்பான உற்பத்தி இடங்களை நிறுவனங்கள் தேட தொடங்கியுள்ளது. குறிப்பாக சீனாவில் நிலவி வரும் பிரச்சனை இந்தியாவுக்கு சாதகமாக மாறத் தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இங்கு சப்ளை சங்கியில் தாக்கம் நிலவி வருகின்றது. இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அரசின் ஊக்க சலுகைகள
தற்போது அரசு பி எல் ஐ திட்டத்தின் மூலம் உற்பத்தியினை மேம்படுத்த முயற்சி செய்து வருகின்றது. அரசு வழங்கும் சலுகைகளை பெற நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications