இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் நாட்டின் உற்பத்தித் துறை அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாகப் பல தொழிற்சாலைகள் ஊழியர்கள் மத்தியிலான கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தற்காலிகமாக மூடியது.
இதேவேளையில் கொரோனா தொற்று மூலம் பல லட்சம் பேர் தொடர்ந்து வேலைவாய்ப்பை இழந்து வரும் நிலையில், சந்தையில் டிமாண்ட் அளவு பெரிய அளவில் குறைந்து நுகர்வோர் சந்தை பாதித்துள்ளது. இதன் வாயிலாக உற்பத்தித் துறை பாதித்துள்ளது.
உற்பத்தி பிஎம்ஐ குறியீடு
கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் இந்தியா ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு அளவு 55.5 புள்ளிகளாக இருந்தது. தற்போது கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பாதிப்பால் மே மாதம் இதன் அளவீடு 50.8 புள்ளிகளாகச் சரிந்துள்ளது.
10 மாத சரிவு
உற்பத்தி பிஎம்ஐ குறியீட்டில் மே மாதம் ஏற்பட்டு உள்ள பாதிப்பு 10 மாத சரிவு என IHS மார்கிட் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த மோசமாக நிலையிலும் நடக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு என்பது 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது என்பது பொருள்.
வளர்ச்சி பாதை
இதனால் மே மாதம் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு 50.8 புள்ளிகளாகக் குறைந்தாலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பது சற்று ஆறுதலாக உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் சந்தை அதிகளவிலான பாதிப்பை இந்தக் கொரோனா 2வது அலையில் எதிர்கொண்டு உள்ளது.
கொரோனா அலை
2020 கொரோனா அலையில் பெரு நகரங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டது, ஆனால் 2வது அலையில் நாட்டின் ஒவ்வொரு சிறு, குறு கிராமங்கள் வரையில் பெரிய அளவிலான தொற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது, இந்தப் பயம் நாட்டின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி
பொதுவாக மக்கள் அதிகமான பொருட்களை வாங்கும் போதும், அதிகளவிலான பயணங்கள் மேற்கொள்ளும் போது தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
லோக்கல் லாக்டவுன்
தற்போது லோக்கல் லாக்டவுன் விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் பல தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகள் உடன் தொடர்ந்து இயங்கிக் வருகிறது, ஆனாலும் மக்கள் மத்தியில் நுகர்வு அளவீடு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கூகுள் மொபிலிட்டி தரவுகள்
குறிப்பாக ரீடைல் மற்றும் ரெக்கிரேயஷன் துறை பிப் 15ஆம் தேதி வாரத்தில் -21.9 சதவீதமாக இருந்த நிலையில் மே 17ஆம் தேதி முடிந்த வாரத்தில் -65.3 சதவீதமாகக் குறைந்துள்ளது எனக் கூகுள் மொபிலிட்டி தரவுகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications