இந்தியாவின் உற்பத்தி விகிதம் குறித்தான பர்சேஸிங் மேனேஜர்ஸ் விகிதமானது கடந்த பிப்ரவரி மாதத்தில், 4 மாதங்களில் குறைந்தபட்ச அளவாக 55.3% ஆக சரிவினைக் கண்டுள்ளது.
இது கடந்த ஜனவரி மாதத்தில் 55.4 சதவீதமாக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் மூலதன செலவினங்களால் சரிவினைக் கண்டு வருகின்றது.
அதே போல வெளி நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆர்டர்கள் ஓரளவுக்கு மட்டுமே அதிகரித்தன. இதன் காரணமாக தேவையானது சரிவிலேயே காணப்பட்டது. அதேசமயம் செலவினம் என்பது கணிசமாக உயர்ந்துள்ளது.
மூலதன செலவு அதிகரிப்பு
தொடர்ந்து தொழிற்துறையில் மூலதன செலவினங்கள் உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக எரிபொருள், மின்சாதன உதிரி பாகங்கள், உனவு பொருட்கள், உலோகங்கள் மற்றும் ஜவுளித் துறை என பல துறையிலும் மூலதன பொருட்கள் விலையானது உயர்வினைக் கண்டுள்ளது.
பணவீக்கம்
எப்படியிருப்பினும் பணவீக்கம் என்பது ஓரளவு நீண்டகால சராசரிக்கும், இரண்டு ஆண்டு சராசரிக்கும் குறைவாக உள்ளதாக எஸ் & பி கணிப்பு தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களும் மூலதன செலவு அதிகரித்துள்ள போதில், அதனால் பொருட்கள் விலையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நிறுவனங்கள் வாடிக்கையாளார்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. எனினும் பெருமபாலான நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்கும்பொருட்டு, கட்டணத்தை அதிகரிக்காமல் விட்டு விட்டன.
20 மாதங்களாகவே வளர்ச்சி
தொடர்ந்து கடந்த 20 மாதங்களாக அதன் உற்பத்தியானது உயர்ந்து வருவதை காண முடிகின்றது. தொடர்ந்து ஆர்டர்கள் என்பது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், தேவையும் கணிசமான உயர்ந்து வருவதை காண முடிகின்றது என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய வணிக வளர்ச்சி
உள்நாட்டு சந்தை புதிய வணிக வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக இருந்தது. வெளி நாடுகளில் இருந்து ஓரளவே ஆர்டர்கள் வந்துள்ளன. சர்வதேச விற்பனை என்பது 11 மாத கால விரிவாக்கத்தில் சரிவில் காணப்படுகின்றது.
எப்படியிருப்பினும் மெதுவான கணிசமான வளர்ச்சியினை பிப்ரவரி மாதத்தில் கண்டுள்ளது. எனினும் தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரிப்பு உள்ளது. அதேசமயம் தேவை என்பது கணிசமாக உள்ளதால், இது பெரியளவில் தொழில் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான வேலை வாய்ப்பு
நிறுவனங்கள் போதுமான வேலை வாய்ப்பினை உருவாக்க தவறிவிட்டதாகவும், தற்போதைய தேவைகளை சமாளிக்கும் அளவுக்கு தங்களிடம் போதுமான அளவுக்கு பணியாளர்களை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஜிடிபி
இந்தியாவின் ஜிடிபி அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.4% வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைச்சகம் அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டு உள்ளது.
2023-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புக்கு இணையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 7% வளர்ச்சியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications