ஆட்டம் போடும் சீனா, கடுப்பாகும் அமெரிக்கா.. இந்தியாவுக்கு புதிய வாய்ப்பு.. எப்படி..?

அரிய உலோகங்கள் மீது சீனா புதிய கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் வேளையில், இதை கடுமையாக கண்டித்து அமெரிக்கா சீனா மீது நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 100 சதவீத வரியை விதிக்க உள்ளதாக அறிவித்தார் டிரம்ப். இந்த பிரச்சனை தான் தற்போது உலகம் முழுவதும் முக்கிய பேசு பொருளாக உள்ளது.

சரி இந்த அரிய உலோகம் என்றால் என்ன..? இந்த சிறப்பு வாய்ந்த உலோகத்தால் செய்யப்பட்ட பொருட்களை நாம் தினமும் பார்த்தும், பயன்படுத்தியும் வருகிறோம். உதாரணமாக லித்தியம், கோபால்ட், நிக்கல் போன்றவை உலோகம் தான் ஈவி கார்களின் பேட்டரிகளின் தயாரிப்பின் அடிப்படையாக இருக்கின்றன.

ஆட்டம் போடும் சீனா, கடுப்பாகும் அமெரிக்கா.. இந்தியாவுக்கு புதிய வாய்ப்பு.. எப்படி..?

இதேபோல் அரிய உலோகங்கள் என கருதப்படும் 20-25 உலோகத்தால் செய்யப்பட்ட காந்தம் கார்களிலும், ரேடார், போர் விமானங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் சிலிக்கான் போன்ற உலோகம் சோலார் பேனல் மற்றும் செமிகண்டக்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் இந்த அரிய உலோகம் முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்று உலகம் இயங்க கச்சா எண்ணெய் எந்த அளவுக்கு முக்கியமாக இருந்ததோ, அதேபோல இன்று அரிய உலோகம் அத்தியாவசியமானவை.

இந்த தாதுக்கள், உலகப் பொருளாதாரம் மற்றும் சமூகங்களை மாற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையாக உள்ளன. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த பொருளாக மாறியிருக்கும் அரிய உலோக துறையில் இந்தியாவின் நிலை என்ன..? சீனாவின் கட்டுப்பாடுகள் இந்தியாவுக்கு பாதிப்பா..? வாய்ப்பா..?

சீனாவின் ஆதிக்கம்
இந்த அரிய உலோகம் தான் அடுத்த உலக போருக்கு அடித்தளமாக இருக்கும் என்ற அச்சமும் தற்போது பலருக்கு எழுந்துள்ளது. காரணம் இந்த அரிய உலோகத்தின் மொத்த சப்ளை செயினும் சீனா-வின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சீனா-வில் பெரும்பாலான அரிய உலோகம் தாது உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் உலகளவில் வெட்டியெடுக்கப்படும் 90 சதவீத தாதுக்கள் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அதை பிராசஸ் செய்யப்பட்டு அதன் பின்பு தான் உலோகங்களாவும், பொருட்களாகவும் தயாரிக்கப்படுகிறது.

உலகளவில் அரிய உலோக சுரங்க உற்பத்தியில் 60 சதவீதமும், பிராசஸிங் மற்றும் காந்த உற்பத்தியில் 90 சதவீதம் சீனா பங்கு வகிக்கிறது.இப்படியிருக்கும் சூழ்நிலையில் சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அல்லது விநியோக தடையால் உலகளவில் அதிர்வலைகள் உருவாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் இதனால் உலக நாடுகளில் பல துறைகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

உதாரணமாக இந்தோனேசியா-வில் உலகளவில் பெரும்பகுதி நிக்கல் வெட்டி எடுக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் லித்தியம் தாதுவில் உலகின் மூன்றில் ஒரு பகுதியை அளித்தாலும், அவை அனைத்தும் சீனாவுக்கு அனுப்பப்பட்டு பிராசஸ் செய்யப்படுகின்றன.

2024ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தை பார்க்கும் போது சீனா உலக அரிய உலோகங்கள் மற்றும் இயற்கை கிராஃபைட் 90 சதவீதம், கோபால்ட் 80 சதவீதம், லித்தியம் இரசாயனங்கள் 70 சதவீதம் பிராசஸ் செய்தது. இது அனைத்தும் பிற நாடுகளி் குறைந்த மதிப்பில் வெட்டியெடுக்கப்பட்ட தாதுக்களை ஏற்றுமதி செய்து, உயர் மதிப்புள்ள பிராசஸ் பொருட்களாக விற்கிறது சீனா.

தற்போது சீனா அரிய உலோகங்களை தயாரிப்பதற்கும், பிராசஸ் செய்வதற்கும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்கள், கருவிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பிரசசிங் பிரிவு சீனாவை விட்டு வெளியேற முடியாத நிலையில் மாட்டிக்கொண்டுள்ளது.

இந்தியாவின் சவால் மற்றும் வாய்ப்பு:
அரிய உலோகத்தில் தற்போது நிலவும் சூழல் இந்தியாவுக்கு எச்சரிக்கை மற்றும் வாய்ப்பு என இரண்டையும் அளிக்கிறது. இந்தியாவில் அரிய உலோக தாது மிகவும் குறைவு, இதனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல் அரிய உலோக தாதுவை பிராசசஸ் செய்யும் தொழில்நுட்பம் இல்லை, சீனாவின் கட்டுப்பாட்டால் இந்தியாவில் பல துறை பாதிப்படையும். இது அனைத்தும் இந்தியாவுக்கு வார்னிங்.

ஆனால் வாய்ப்பாக பார்த்தால் இந்தியாவில் போதுமான மக்கள் தொகை, திறன் மிக்க ஊழியர்கள் இதனால் இப்போதே இந்தியா அரிய உலோகத்தில் சீனாவுக்கு மாற்று என செயல்பட்டால், இந்தியா உலகின் முக்கிய உற்பத்தி தளமாக மாற்றலாம். இது வாய்ப்பு.

இதுக்குறித்து CEEW அமைப்பு வெளியிட்டுள்ள "Making India a Hub for Critical Minerals Processing" அறிக்கையில், இந்த வாய்ப்பை இந்தியா எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறது. இந்த அறிக்கை, சீனாவின் சுரங்கம் மட்டுமல்ல, பிராசஸிங் ஆதிக்கத்தை மையமாகக் கொண்டு தான் இத்தகைய ஆதிக்கத்தை செலுத்துகிறது. ஏனெனில் உண்மையான மதிப்பு பிராசஸிங்கில் உள்ளது.

ஜம்முவில் லித்தியம் கண்டுபிடித்தாலும், உள்ளூர் பிராசஸிங் கட்டமைப்பு இல்லாமல் அது வெறும் பாறைகளாகவே இருக்கிறது. இதற்கு விரைவாக ஒரு தீர்வு காணப்பட்டால் இந்தியா அரிய உலோகத்திற்கான புதிய குளோபல் பேஸ்மென்ட் ஆக இருக்கும். இந்தியா பெரும் முதலீட்டில் அரிய உலோகத்தை இந்தியா முழுவதும் கண்டுப்படிக்க செலவு செய்து வருகிறது. இதேவேளையில் இதை சுத்திகரிப்பு மற்றும் பிரசசிங் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் தற்போதைய பலம்:
இந்தியாவில் தற்போது காப்பர், கிராஃபைட், அரிய உலோகங்கள், சிலிக்கான், டின், டைட்டானியம், ஜிர்கோனியம் என்ற 7 முக்கிய தாதுக்களுக்கு மட்டும் வணிக அளவிலான பிராசஸிங் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த உலோகத்திற்கும் உள்நாட்டு தேவைகளை தீர்க்கும் அளவுக்கு கூட போதிய பிரசசிங் திறன் இல்லை. குறிப்பாக உயர் தொழில்நுட்பங்களுக்கு தேவையான உயர் தூய்மை அளவுகளில் இந்தியா பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

இந்தியா ஏன் பின்தங்கியது:
இந்தியா பிராசஸிங் துறையில் பின்தங்கியதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்துறையில் தொழில்நுட்ப அறிவு குறைவு, ஏனெனில் லித்தியம் பிராசஸிங் இரும்பு பிராசஸிங்கை விட வேறுபட்டது. ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இடையிலான இணைப்பு போதுமானதாக இல்லை, இரண்டாம் நிலை தொய்வு, அதாழது தொழில்துறை கழிவுகளில் இருந்து உலோகங்களை மீட்டு எடுக்கும் முறையை போதிய அளவில் பயன்படுத்தவில்லை, திறமையான ஊழியர் பற்றாக்குறை ஆகியவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.

வாய்ப்பு இருக்கு ஆனா இல்லை:
சீனாவின் கட்டுப்பாடுகள் உலக நாடுகளுக்கு புதிய சந்தையை உருவாக்க தேவை உருவாகியுள்ளது. இது ஏன் இந்தியாவாக இருக்க கூடாது என்பதே இப்போதைய கேள்வி. ஆனால் இத்துறையில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்றால் உடனடியாகவும், வேகமாகவும் செயல்பட வேண்டும்.

இத்துறையில் திறமையான ஊழியர்களை உருவாக்க கல்லூரியில் இருந்து தொழிற்துறை வரை, போக்குவரத்து, முதலீடு என பல இடத்தில் மொத்தமாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+