ஒரு காலத்தில் நிலையான வேலைகள், சாதாரண வீடுகள், கார்கள் மற்றும் வருடாந்திர விடுமுறைகளுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் நடுத்தர வர்க்கம், ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்கம் இப்போது இரண்டு பிரிவாக உடைந்துவிட்டதாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர் ஷியாம் அச்சுதன் தெரிவித்துள்ளார். அதாவது, அவரது பார்வையில் இன்றைய நிலையில் பணக்காரர்கள் vs ஏழைகள் கிடையாது.
அதற்கு மாறாக பணக்காரரும் ஏழைகளும் இடையே அல்ல, மாறாக பணம் இருப்பது போல நடிப்பவர்கள் vs அமைதியாக செல்வத்தை உருவாக்குபவர்கள் என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பிரிவினர் இடையே தான் இன்று வேறுபாடு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதாவது, சிலர் தங்களை மற்றவர்கள் மத்தியில் செல்வமாக காட்ட முயற்சிப்பதாகவும், இன்னும் சிலர் அமைதியாக பணத்தை சேமித்து முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள LinkedIn பதிவில், இந்திய நடுத்தர வர்க்கத்தின் நிலை குறித்து தனது வருத்தத்தையும், கவலையும் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், "ஒரு காலத்தில் நிலையான வேலை, இரு சக்கர வாகனம் வாங்குதல், கார் வாங்குதல், ஆண்டு விடுமுறைக்கு செல்லுதல், சொந்த வீடு கட்டும் கனவு போன்றவை நடுத்தர வர்க்கத்தின் சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், இன்று அந்த வாழ்க்கை முறை மாறிவிட்டது.
அவரது பதிவில், நடுத்தர வர்க்கம் இன்று "பணக்காரர் மற்றும் ஏழைகள்" என இல்லாமல், "செல்வத்தை வெளிப்படையாகக் காட்டுபவர்கள் மற்றும் அமைதியாக செல்வத்தை உருவாக்குபவர்கள்" என இரு புதிய பிரிவுகளாக பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு, இந்தியாவில் வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது.
அவரது பதிவில், இன்றைய இந்திய நடுத்தர வர்க்கம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் மற்றும் வாழ்க்கை முறையை கடுமையாக விமர்சித்துள்ளார். "இன்று நடுத்தர வர்க்கம் ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அது செல்வத்தின் பக்கம் அல்லது கவலையின் பக்கம் இழுக்கப்படுகிறது. இனி நடுத்தர நிலை என்பது ஒரு மாயைதான்" என்று தெரிவித்துள்ளார். அதாவது, உண்மையான பொருளாதார நிலையை விட, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கும் வாழ்க்கை முறை தான் பலர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், "EMI-யில் வாங்கப்படும் ஐபோன்கள், அதிக விலை கொண்ட பிராண்டட் ஆடைகள் என இவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் தோன்றும் ஆசைதான். ஆனால், உண்மையில் அவர்கள் செல்வத்தை சேர்க்கவில்லை. பணக்காரர்களைப் போல ஒரு தோற்றத்தை மட்டுமே உருவாக்குகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார் என்றால், அதில் ரூ.20,000 வாடகைக்கும், ரூ.10,000 EMI-க்கும், ரூ.5,000 ஆடம்பரத்திற்கும் செலவாகிறது. இதில் உண்மையான முதலீடுகளுக்கு ரூ.1,000 தான் மீதம் இருக்கும். இதை நிதி தற்கொலை என்று தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் ஷியாம் அச்சுதன் விமர்சித்துள்ளார். இப்போதைய வாழ்க்கையை மேற்கொள்ள தங்கள் எதிர்காலத்தை கடன் வாங்கி வீண் செலவு செய்வதாகவும், உண்மையான சொத்துகளுக்கு பதிலாக, இன்ஸ்டாகிராமில் காட்டும் அழகிய வாழ்க்கையே அவர்களுக்கு முக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், சிலர் புத்திசாலிகளாகவும், அமைதியாகவும் செயல்படுகிறார்கள். அவர்கள், "ஆடம்பர திருமணங்களைத் தவிர்க்கிறார்கள், பழைய கார்களையே வைத்திருக்கிறார்கள், மெட்ரோவில் பயணிக்கிறார்கள், தங்கள் வருமானத்திற்கு குறைவாக செலவு செய்கிறார்கள், தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள்." இப்போது அவர்கள் செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் வாடகைக்கு வாழும் பலரை வீடுகளுக்கு உரிமையாளர்களாக மாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுவது போல், ஒவ்வொரு ரூபாயையும் கண்காணித்து, வருமானத்தின் 20-30% முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சொத்துக்களை உருவாக்கி பணம் எப்படி வேலை செய்கிறது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். "இன்றைய உங்கள் முடிவுகள், நாளைய உங்கள் நிலையை தீர்மானிக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications