மைலேஜ் பயமா.. மொத்தமாக தூக்கி சாப்பிட்ட பட்ஜெட் விலையில் முதல் PHEV கார் - MG Hector Tomahawk

எலக்ட்ரிக் கார் வாங்கலாம் என்ற ஆசை பலருக்கும் உள்ளகு, ஆனால் நீண்ட தூரப் பயணங்களில் குறிப்பாக தமிழ்நாட்டை விட்டு வெளியூர் போகும் போது சார்ஜிங் வசதி கிடைக்குமா என்ற பயம் இன்னும் மக்கள் மத்தியில் உள்ளது. பெட்ரோல் காரை வாங்கினால் சார்ஜிங் பிரச்னை இல்லை, ஆனால் எரிபொருள் செலவு அதிகம்.

இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் தீர்வு தான் ஹைப்ரிட் கார், இதை விட ஒரு திறன்மிக்க தொழில்நுட்பம் ஆடம்பர காரகளில் மட்டுமே இருக்கிறது. அதுதான் PHEV.

 மைலேஜ் பயமா.. மொத்தமாக தூக்கி சாப்பிட்ட பட்ஜெட் விலையில் முதல் PHEV கார் - MG Hector Tomahawk

இந்தியாவின் மாஸ் மார்க்கெட் கார் பிரிவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது JSW MG Motor India. பிளக்-இன் ஹைப்ரிட் SUV காராக MG Hector Tomahawk PHEV அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25.69 லட்சம். Battery-as-a-Service (BaaS) திட்டத்தில் ரூ.21.79 லட்சம் முதல் வாங்கும் வாய்ப்பும் உள்ளதால் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. PHEV தொழில்நுட்பத்துடன் இருக்கும் கார்களின் விலை 40-50 லட்சம் வரையில் இருக்கும் வேளையில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய புரட்சியை JSW MG Motor உருவாக்கியுள்ளது.

PHEV அதாவது Plug-in Hybrid Electric Vehicle என்றால் என்ன..? இத்தகைய தொழில்நுட்பம் உள்ள காரை முழுமையாக எலக்ட்ரிக் காராகவும் பயன்படுத்தலாம், இதேபோல் பெட்ரோல் காராகவும் பயன்படுத்தலாம். இது ஹைப்ரிட் கார்களை விடவும் முற்றிலும் மாறுப்பட்டது. எப்படி பெட்ரோல் காரில் பெட்ரோல் போடுகிறோம், எப்படி முழுமையான எலக்ட்ரிக் காரில் சார்ஜ் செய்கிறோம். இது இரண்டும் ஓரே காரில் இருக்கும்.

Hector Tomahawk PHEV-ல் 20.5 kWh பேட்டரி மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியில் 115 கி.மீ-க்கும் அதிகமாக மின்சாரத்தில் பயணிக்க முடியும் என MG தெரிவித்துள்ளது.

இதனால் தினமும் அலுவலகம் செலவது, பள்ளி - கல்லூரிகளுக்கு பிக்அப், டிராம் அல்லது நகரத்துக்குள் செய்யும் பயணங்களுக்கு பெட்ரோல் பயன்படுத்தாமல் எலக்டிரிக் காராக மட்டுமே இயக்க முடியும். எலக்ட்ரிக் காராக பயன்படுத்தும் போது நீங்கள் பெட்ரோல் போட வேண்டிய அவசியமும் இல்லை.

நீண்ட தூரப் பயணம் செல்லும்போது பேட்டரி சார்ஜ் குறைந்தாலும் பெட்ரோல் இன்ஜின் இருப்பதால் பயணத்தைத் தொடர முடியும். ஃபுல் பேட்டரி சார்ஜ் மற்றும் ஃபுல் பெட்ரோல் டேங்குடன் 1100 கிமீ வரையில் பயணிக்கும் காராக இருக்கும்.

உதாரணமாக நீங்கள் பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்ல உள்ளீர்கள். பெங்களூரில் இருந்து அத்திபள்ளி டோல் வரை சில நேரம் ஒசூர் போருந்து நிலையம் வரையில் கடுமையான டிராபிக் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பெட்ரோல் செலவை குறைக்க எலக்டிரிக் காராக பயன்படுத்தலாம்.

இதேவேளையில் ஒசூர் போருந்து நிலையத்தை தாண்டிய பின்பு ஃபுல் பவரில் வேகமாக செல்ல பெட்ரோல் காராக பயன்படுத்தலாம். விழுப்புரம், ஆம்பூரில் நீங்கள் சாப்பிட ஹோட்டலுக்கு செல்லும் போது காரை சார்ஜிங் போட்டுவிடலாம். இந்த சார்ஜிங் நீங்கள் சென்னையில் பெருங்குளத்தூர் டிராபிக்கை கடந்து வீட்டுக்கு செல்ல உதவும்.

இத்தகைய கட்டமைப்பு மூலம் எரிபொருள் செலவை சேமிப்பது மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற டிராபிக் நிறைந்த நகரங்களுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கும். இதேபோல் நாடு முழுவதும் சார்ஜிங் கட்டமைப்பு இன்னும் முழுமையாக வராத நிலையில் PHEV கார் தான் சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்தியாவில் தற்போது PHEV தொழில்நுட்பத்துடன் இருக்கும் கார்களை பார்த்தால் வால்வோ XC60 70 லட்சம் ரூபாய், BMW XM 2.5 கோடி ரூபாய்க்கு மேல், BMW M5 2 கோடி ரூபாய். ஆனால் MG Hector Tomahawk PHEV கார் 30 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+