2023 ஆம் ஆண்டைப்பற்றி பல பெருமைகளைக் கூற முடியும் என்றாலும் இந்தாண்டு நடைபெற்ற ஒரு ஓவியத்தின் விற்பனை பற்றி கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும்.
பஞ்சாபை சேர்ந்த பெரிய பணக்காரர் உம்ராவ் ஷேர் கில். பெரிய ஸ்காலர். பச்சை சீக்கியர். அவரது மனைவி ஓர் ஓபரா இசைக்கலைஞர். ஹங்கேரியைச் சேர்ந்தவர். இவர்களது மகள் அமிர்தா ஷேர் கில்.

அமிர்தாவுக்கு இளம் வயதிலேயே ஓவியங்கள் மீது நிறைய ஆர்வம் இருந்தது. இதற்காக அவர் பிரான்ஸில் உள்ள பாரீஸ், இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் ஆகிய நகரங்களில் தங்கி ஓவியக் கலையைக் கற்றுக் கொண்டார். 1921 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய அவர் மலைநகரமான ஷிம்லாவில் குடியேறினார்.
பின்னர் உத்தரப்பிரதேசத்தின் சரயா பகுதியில் தனது உறவினருக்குச் சொந்தமான ஒரு எஸ்டேட்டில் தங்கியிருந்தபோது
அங்கு வசித்த நாட்டுப்புறப் பெண்களின் வாழ்க்கையை கவனித்தார். அவர்களது அன்றாட கடும் உழைப்பு அமிர்தாவுக்கு பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.
இதனால் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாக வைத்து ஒரு ஓவியத்தை வரைந்தார். அதற்கு தி ஸ்டோரி டெல்லர் என்று பெயரிட்டார். 1937 ஆம் ஆண்டில் இந்த ஓவியம் படைக்கப்பட்டது.
இந்த ஓவியம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று எனத் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் குறிப்பிடுவாராம். இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்தில் பிரபலமாக இருந்த பெண் ஓவியர்களில் அமிர்தாவும் ஒருவர். துரதிர்ஷ்ட வசமாக அமிர்தா ஷேர்-கில் என்ற அந்த மாபெரும் கலைஞர் 1941 ஆம் ஆண்டில் காலமானார். அப்போது அவரது வயது வெறும் 28.
கடந்த செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற ஏலத்தில் தி ஸ்டோரி டெல்லர் ஓவியம் ரூ.61.8 கோடிக்கு விற்பனையானது. அமெரிக்க மதிப்பில் 7.4 மில்லியன் டாலர்களாகும்.
வெளிநாடுகளில் இதுபோன்ற ஓவியங்கள், புராதன பொருட்கள் பெரும் விலைக்கு ஏலம் போவதுண்டு. ஆனால் இந்தியாவில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இந்தியாவில் இதற்கு முன்னர் இவ்வளவு விலைக்கு எந்தவொரு ஓவியமும் விற்பனையானதில்லை.
இந்த ஓவியத்தை ஏலத்தில் விற்ற நிறுவனம் இது பற்றி கூறுகையில், இதுபோன்ற வேலைப்பாடு நிறைந்த ஓவியம் விற்பனைக்காக வருவது மிகவும் அரிதான விஷயமாகும் எனப் பெருமிதத்துடன் சொல்லியது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications