ஜக்கி வாசுதேவ் டூ நித்தியானந்தா.. இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!

சென்னை: இந்தியாவில் ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் நடத்தும் ஆசிரமங்களுக்கு செல்வாக்கு என்பது சற்றே அதிகமாக தான் இருக்கிறது. ஆன்மீக குருக்கள் மற்றும் பாபாக்கள் வழங்கும் போதனைகளால் ஈர்க்கப்பட்டு பெரும்பாலான பக்தர்கள் அவர்களை பின் தொடர்கின்றனர்.

இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் இவர்களை பின்பற்றுகின்றனர். அப்படி இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஆன்மீக குருக்களின் சொத்து விவரங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்..

 ஜக்கி வாசுதேவ் டூ நித்தியானந்தா.. இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!

சத்குரு ஜக்கி வாசுதேவ்: ஈஷா அறக்கட்டளையின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியாவிலுள்ள ஆன்மீக குருக்களில் மிகவும் பிரபலமானவர். உலகம் முழுவதும் பரவலாக அறியப்படக்கூடிய ஒரு நபர். இலட்சக்கணக்கான பக்தர்கள் இவரை பின்தொடர்கின்றனர். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் 2023 ஆம் ஆண்டின் படி ஜக்கி வாசுதேவ் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.18 கோடி ஆகும். கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் இவர் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தி ஆர்ட் ஆஃப் லிவிங் அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். அமைதி, தியானம் உள்ளிட்டவை குறித்து இவர் உரையாற்றுவார். கிட்டத்தட்ட 151 நாடுகளை சேர்ந்த 300 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் இவரை பின்தொடர்கின்றனர். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் இவரது சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி ஆகும். இவர் பல்வேறு இடங்களில் ஆர்ட் ஆஃப் லிவிங் மையங்களை நடத்தி வருகிறார்.

பாபா ராம்தேவ்: இந்தியாவின் யோகா குருவான பாபா ராம்தேவ் தன்னுடைய யோகா கலைகள் மற்றும் தன்னுடைய தொழில் முனைவு மூலம் பரவலாக அறியப்படக்கூடியவர். இவர் இந்தியாவில் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தை நிறுவி பல்வேறு ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

பல்வேறு சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டியாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் பொருட்கள் இந்தியாவில் விற்பனையாகின்றன. ஹரித்வாரில் யோகா கலைகளை கற்றுத் தந்து வந்த இவர் படிப்படியாக முன்னேறி தற்போது பதஞ்சலி யோகி மற்றும் திவ்யா யோக் மந்திர் என்று அறக்கட்டளையை செயல்படுத்தி வருகிறார் இவரது சொத்து மதிப்பு ரூ.1600 கோடி ஆகும்.

அம்மா: மாதா அமிர்தானந்தமயி இவர் பரவலாக அம்மா என அறியப்படுகிறார். கேரளாவை சேர்ந்த இவர் 1953 செப்டம்பர் 27ஆம் தேதி பிறந்தார். அமிர்தானந்தமயி அறக்கட்டளை நிறுவி பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1500 கோடி ஆகும்.

குர்மீத் ராம் ரஹீம் சிங்: இந்தியாவில் செல்வம் மிகுந்த ஒரு குரு இவர். 1990 ஆம் ஆண்டு முதல் ராம் ரஹீமை லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரது சொத்து மதிப்பு ரூ.1455 கோடி ஆகும்.

ஆசாராம் பாபு: சர்வதேச அளவில் ஆசிரமங்களை நிறுவியிருக்கும் பிரபலமான குரு. உலகம் முழுவதும் இவர் 350 ஆசிரமங்களையும், 17,000 பால் சென்ஸ்கார் கேந்திராக்களை நிறுவியுள்ளார். 2021 ஆம் ஆண்டு படி இவரது அறக்கட்டளைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.350 கோடி வருவாய் இவருக்கு கிடைக்கிறது.

சுவாமி நித்தியானந்தா: சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். நித்தியானந்தா தியான பீடம் அறக்கட்டளை என்பதை செயல்படுத்தி வருபவர். தனி நாடு நிறுவியதாக அறியப்படுபவர். இவர் சொத்து மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய் ஆகும்.

story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+