இந்தியாவின் சக்தி வாய்ந்த ஜோடிகள்.. முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தான் டாப் லிஸ்ட்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி, இந்தியாவின் சக்தி வாய்ந்த ஜோடிகளில் முதல் இடம் பிடித்துள்ளனர்.

இது குறித்து இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB) நடத்திய ஆய்வில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியும் முதலிடத்தில் உள்ளனர்.

இரண்டாவது இடத்தில் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங்-கும் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோலி & அனுஷ்கா சர்மா

விராட் கோலி & அனுஷ்கா சர்மா

மேலும் மூன்றாவது இடத்தில் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம் பெற்றுள்ளனர்.
இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில், இந்த சக்தி வாய்ந்த ஜோடிகள் பட்டியலில் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த ஐந்து ஜோடிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது தான்.

இன்ஃபோசிஸ்-ன் நிறுவனர்

இன்ஃபோசிஸ்-ன் நிறுவனர்

அதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாரயண மூர்த்தியும், அவரது மனைவி சுதா மூர்த்தியும் 10வது இடம் பெற்றுள்ளனர்.
இதே சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனவல்லா, அவரின் மனைவி நடாஷா பூனவல்லாவும் 11வது இடத்தில் உள்ளனர்.

அசிம் பிரேம்ஜி & யாஸ்மின் பிரேம்ஜி

அசிம் பிரேம்ஜி & யாஸ்மின் பிரேம்ஜி

இதில் 16வது இடத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரின் தலைவர் யாஸ்மின் பிரேம்ஜி உள்ளனர்.

இதே மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மற்றும் அனுராதா மஹிந்திரா தம்பதியினர் 19வது இடத்திலும், ஆதித்யா பிர்லா குழுமத்தியின் குமார் மங்கலம் மற்றும் நீர்ஜா பிர்லா 20வது இடத்திலும் உள்ளனர்.

சிறந்த பிசினஸ் ஜோடிகள்

சிறந்த பிசினஸ் ஜோடிகள்


வருட வருடம் வெளியிட்டு வரும் இந்த அறிக்கையில், IIHBந் தலைமை அதிகாரி, கடைசியாக நடத்தப்பட்ட 2019ம் ஆண்டு ஆய்வில் இந்த பிசினஸ் ஜோடிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த முறை பிசினஸ் ஜோடிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+