சீனாவின் பிரபலமான மொபைல் நிறுவனமான விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் பல மோசடிகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ தனது விற்றுமுதலில் 50% சீனத்துக்கு சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பறிமுதல்
விவோ நிறுவனத்துக்கு சொந்தமான 119 வங்கிக் கணக்குகளிலிருந்து 465 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கம் 73 லட்சம் ரூபாய் மற்றும் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை சோதனை
பண மோசடி, வரி ஏய்ப்பு போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனங்கள், அவற்றுடன் தொடர்புடைய இந்திய நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கையின் தொடச்சியாக விவோ மற்றும் அதனுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன நிறுவனங்களிடம் தொடர் சோதனை
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் ஓப்போ, விவோ அவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனை மேற்கோண்டது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 6500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கண்டறியப்பட்டதாக வருமான வரித் துறை அப்போது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் ஜியோமியிடமும் சோதனை நடத்தியது. அப்போதும் கூட ஜியோமி சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக தெரிவித்தது.
தொடர்ந்து கடுபிடி
முன்னதாக பாதுகாப்பு காரணங்களை காட்டி சீன நிறுவனங்களின் 300-க்கும் மேற்பட்ட ஆப்களை இந்திய அரசு தடை செய்தது. அதோடு சீன முதலீடுகளுக்கும் கடுமையான விதிகளை விதித்தது. இதனால் தொடர்ந்து சீனாவுக்கும், இந்தியாவுக்கு தொடர்ந்து ஒரு நிச்சமற்ற போக்கோ நிலவி வருகின்றது.
சீனாவின் கருத்து
இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம், சீன நிறுவனங்கள் மீது அந்த நாட்டின் அமலாக்க முகமைகளின் பல விசாரணைகள், சீனா மீது முதலீடு செய்யும் மற்ற நிறுவனங்களின் நம்பிக்கையை சேதப்படுத்துவதாக கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications