இந்தியாவின் 2வது மிகப்பெரிய பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனமாகத் திகழும் அப்ஸ்டாக்ஸ் தளத்தில் கடந்த சில காலாண்டுகளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை இத்தளத்தில் மிகவும் அதிகம்.
இந்நிலையில், Upstox தளம் தற்போது ஹேக்கிங் செய்யப்பட்டுச் சுமார் 25 லட்சம் வாடிக்கையாளர்களின் KYC மற்றும் இதர முக்கியமான தரவுகள் திருடப்பட்டு உள்ளது.
Upstox தளத்தில் சைபர் அட்டாக்
Upstox தளம் ஹேக்கிங் செய்யப்பட்ட பின்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர்களின் பங்குகள் மற்றும் பணம் இருப்பு அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. மேலும் இதுபோன்ற இணையத் தாக்குதல்கள் இனி நடக்காமல் இருக்கச் சர்வர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
3ஆம் தரப்பு டேட்டா வேர்ஹவுஸ்
இந்நிலையில் அப்ஸ்டாக் தளத்தின் தகவல் 3ஆம் தரப்பு டேட்டா வேர்ஹவுஸ்-ல் சேமிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்தத் தகவல் திருட்டு நடைபெற்று உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தகவல் பாதுகாப்பை மேம்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அப்ஸ்டாக்ஸ் தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதல்
கடந்த சில வாரமாக உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகளவிலான சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக லிங்க்டுஇன், பேஸ்புக், மொபிகிவிக் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது அப்ஸ்டாக்ஸ் தளத்தில் சைபர் அட்டாக் நடந்துள்ளது.
பாட்ஸ் மூலம் தகவல் திருட்டு
சைபர் அட்டாக்-ல் பாதிக்கப்பட்டு உள்ள லிங்க்டுஇன் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, லிங்க்டுஇன் தளத்தை நேரடியாக ஹேக்கிங் செய்யப்பட்டு 50 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடப்படவில்லை, இதற்கு மாறாகப் பாட்ஸ் (Bots) உபயோகித்துத் தளத்தில் இருக்கும் தகவல்கள் சுரண்டப்பட்டு உள்ளது என்று லிங்க்டுஇன் தெரிவித்துள்ளது.
லிங்க்டுஇன் விளக்கம்
மேலும் லிங்க்டுஇன் தளத்தில் முறையற்ற வகையில் நுழைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, பாட்களைப் பயன்படுத்தித் தளத்தில் publicly viewable data பிரிவில் இருக்கும் தரவுகள் மட்டுமே தற்போது திருடப்பட்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் லிங்க்டுஇன் தளம் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications