சென்னை: இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை நாட்டின் எதிர்காலத்திற்கே சவால் விடக்கூடிய ஒரு பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உடல் பருமன் மற்றும் அது சம்பந்தப்பட்ட நோய்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
உடல் பருமன் பிரச்சினை: மக்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் ,தினசரி நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் ,யோகா செய்ய வேண்டும், உணவில் எண்ணெய்யை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டின் தலைவர்கள் அனைவரும் மக்களை வலியுறுத்திய வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் தற்போது உடல் எடை குறைப்பு சந்தை என்பது வேகமாக வளர்ந்து வரக்கூடிய அதே வகையில் அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய சந்தையாக மாறி இருக்கிறது .

வெகோவி மருந்து :இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நோவோ நார்டிஸ்க் நிறுவனம் உடல் எடை குறைப்புக்கான ஒரு மருந்தினை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. வெகோவி (WeGovy) என்ற பெயரில் நோவோ நார்டிஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த உடல் பருமனை குறைக்கக்கூடிய மருந்தை ஊசியாக செலுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து டோஸ்களில் இந்த மருந்து சந்தையில் கிடைக்கும் என நோவோ நார்டிஸ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை எவ்வளவு?: இதன் விலை 17,345 இல் இருந்து 26,015 ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இந்தியா முழுவதும் கிடைக்கும் என நோவோ நார்டிஸ்க் நிறுவனம் கூறியிருக்கிறது. மக்களே எளிமையாக செலுத்திக் கொள்ளும் வகையில் இந்த மருந்தினை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதாக அந்த நிறுவனம் கூறி இருக்கிறது . வாரத்திற்கு ஒரு முறை என ஐந்து டோஸ்களில் இந்த மருந்தினை ஊசியாக நாம் செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைக்கு இந்தியாவில் பூஜ்ஜியம் 0.25, 0.5, 1, 1.7 மற்றும் 2.45 எம்ஜி என ஐந்து டோஸ்களில் இந்த மருந்து விற்பனைக்கு வந்துள்ளது.
தேசிய பிரச்சினை: நீண்ட கால அடிப்படையில் உடல் எடையை மேலாண்மை செய்வது மற்றும் உடல் எடை அதிகரித்ததால் ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு இந்த மருந்தினை பயன்படுத்தலாம் என விளம்பரம் செய்கிறது நோவா நார்டிஸ்க். இந்தியாவில் உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட மற்றும் தேசிய தொற்றுநோய் எனக் கூறும் நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரி, மக்கள் தாங்களாகவே செலுத்திக் கொள்ளும் வகையில் வெகோவி மருந்தினை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம், இது இந்தியாவின் உடல் பருமன் பிரச்சனைக்கு பெரிய தீர்வாக அமையும் என கூறியிருக்கிறார்.

இந்தியாவில் எடுபடுமா?: முன்னதாக வெகோவி மருந்தினை எடுத்துக் கொண்டவர்கள் மத்தியில் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 20% வரை குறைந்திருப்பது மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டு இருக்கிறது என மேக்ஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தின் தலைவரான அம்ரிஷ் மிட்டல் தெரிவித்திருக்கிறார். இந்த மருந்தின் செயல்திறன் நன்றாக இருக்கிறது என்பதால் படிப்படியாக இது மக்களிடம் சென்று சேரும் என அவர் கூறியிருக்கிறார். பிஎம்ஐ 30க்கும் மேலிருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்தினை பரிந்துரை செய்யலாம் என கூறுகிறார்.
மௌன்ஜாரோவுக்கு போட்டி: தற்போது உடல் எடையை குறைப்புக்கு இந்தியர்கள் மத்தியில் எளிமையான வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இந்த மருந்து விரைவில் மக்களை சென்றடையும் என அவர் கூறுகிறார். ஏற்கனவே இந்திய சந்தையில் உடல் எடை குறைபுக்காக மௌன்ஜாரோ (mounjaro) என்ற மருந்து விற்பனைக்கு வந்திருக்கிறது. ஏலி லில்லி அண்ட் கம்பெனி என்ற நிறுவனம் தான் இதனை விற்பனை செய்கிறது.
அதிகரிக்கும் போட்டி: இது 2.5 எம்ஜி, 5 எம்ஜி என்ற அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலையும் 14 ,000 ரூபாயிலிருந்து 17,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை மாதாந்திர அடிப்படையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்து இந்திய சந்தையில் விற்பனை வந்ததை அடுத்து தான் நோவா நார்டிஸ்க் போட்டி போட்டு கொண்டு வெகோவி மருந்தினை அறிமுகம் செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications