இந்தியாவின் மிகவும் வயதான கோடீஸ்வரரும், மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எமரிட்டஸ் சேர்மன் ஆக இருக்கும் கேஷுப் மஹிந்திரா புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 99 ஆகும் நிலையில், முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய சொத்து மதிப்பு என்ன..? கேஷுப் மஹிந்திரா-வுக்கும் ஆனந்த் மஹிந்திராவுக்கும் என்ன உறவு..?
2023 ஆம் ஆண்டிற்கான இந்திய பணக்கார பில்லியனர்களின் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. இந்த பட்டியலில் பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நுழைந்த 99 வயதான கேஷுப் மஹிந்திரா 1.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்தார்.

இந்திய பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்த சில நாட்களிலேயே கேஷுப் மஹிந்திரா காலமானார். இது மஹிந்திரா குடும்பத்திற்கு மிகவும் வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது. கேஷுப் மஹிந்திரா 1947 ஆம் ஆண்டில் தனது தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்தார், 1963 இல் மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவரானார்.
சுமார் 48 ஆண்டுகள் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தை வழிநடத்திய பின்னர் 2012 இல் கேஷுப் மஹிந்திரா பதவி விலகினார். இவரை தொடர்ந்து கேஷுப் மஹிந்திராவின் மருமகன், தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, அவரது வாரிசாக நியமிக்கப்பட்டார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் கல்லூரியில் பட்டம் பெற்ற கேஷுப் மஹிந்திரா, மஹிந்திரா நிறுவனத்தை, இந்தியாவில் வெறும் வில்லிஸ் ஜீப்களை அசெம்ப்ளி செய்யும் நிறுவனத்தில் இருந்து பல துறையில் வர்த்தகம் செய்யும் கூட்டு நிறுவனமாக மாற்றியதில் பெரும் பங்கு கேஷுப் மஹிந்திரா-வுக்கு உண்டு.

இன்று மஹிந்திரா குழுமம் 19 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பிடப்படுகிறது, இந்த மாபெரும் வளர்ச்சி பாதைக்கு 48 ஆண்டுகள் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தை வழிநடத்திய கேஷுப் மஹிந்திரா-வின் பங்கு மிகவும் முக்கியமானது. மஹிந்திரா & மஹிந்திரா தற்போது டிராக்டர்கள், எஸ்யூவி கார்களுக்கு பெயர்பெற்றதாக இருந்தாலும் மென்பொருள் சேவைகள், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறையிலும் உள்ளது.
கேஷுப் மஹிந்திரா பல அரசு குழுக்களில் இருந்துள்ளது மட்டும் அல்லாமல் 2004 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமரின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை குழுவில் இருந்தார். 1987ல் பிரான்ஸ் அரசு கேஷுப் மஹிந்திரா-வுக்கு Chevalier de l'Ordre National de la Legion d'honneur விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications