இந்திய ரயில்வே மூலம் 13,000-த்திற்கும் மேற்பட்ட ரயில்கள் ஒவ்வொரு நாளும் இயக்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில் பயணிகள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இந்திய ரயில்வே பெரிதும் உதவுகிறது. பிற போக்குவரத்துச் சேவைகளோடு ஒப்பிடுகையில் ரயில் கட்டணம் மிகவும் குறைவு. இந்நிலையில் டிக்கெட் கட்டணமே இல்லாமல் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகளுக்கு இலவச சேவையை வழங்கி வரும் ரயில் ஒன்று உள்ளது. அந்த ரயிலின் பெயர் என்ன என்பது குறித்தும், அவை சென்றடையும் இடங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாக நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் டிக்கெட் பெற வேண்டும். ஒரு வேலை பயணி டிக்கட் இல்லாமல் பிடிபட்டால், அவரை ரயிலில் இருந்து இறக்குவதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு டிக்கெட் செக்கருக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரே ஒரு ரயிலில் டிக்கெட்டை வாங்காமல் பயணம் செய்யலாம்.

பக்ரா-நங்கல் ரயில் சேவை: பக்ரா-நங்கல் அணைக்கட்டும்போது பக்ரா மற்றும் நங்கல் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வழியே இல்லை. எனவே 1948-ஆம் ஆண்டு பக்ரா மற்றும் நங்கல் இடையே ரயில் சேவை முதன்முதலாக நிறுவப்பட்டது. அப்போது ஒரு சிறப்பு ரயிலும் தேவைப்பட்டது. அதோடு அணை கட்டுவதற்கு கனரக இயந்திரங்கள் ஏற்றி செல்வதற்கும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் பக்ரா மற்றும் நங்கள் ஆகிய ஊர்களை இணைக்கும் ரயில் பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் சேவை இந்திய ரயில்வேயால் நிர்வகிக்கப்படவில்லை. பக்ரா-நங்கல் ரயில் சேவை முதலில் நீராவி எஞ்சின்களால் மட்டுமே இயக்கப்பட்டது. அதன் பிறகு 1953-ஆம் ஆண்டில் இந்த பழைய முறையை மாற்றி நவீன காலத்திற்கு ஏற்ப நவீன இயந்திரங்கள் மூலம் இயக்குவதற்காக அமெரிக்காவிலிருந்து 3 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
தினமும் காலை 7.05 மணிக்கு ரயில் நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 8:20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. பிறகு நங்கல் ரயில் நிலையத்தில் மதியம் 3:05க்கு புறப்பட்டு பக்ரா ரயில் நிலையத்தில் 4.20 மணிக்கு பயணிகளை இறக்கி விடுகிறது. இந்த ரயில் சேவை 75 ஆண்டுகளைக் கொண்டாடவுள்ளது. கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் தவறாமல் இலவசமாக பயணம் செய்ய உதவி வருகிறது. இந்த ரயில் சேவை வெறும் 30 நிமிடத்தில் 27.3 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க உதவுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சிவாலிக்கள், இரண்டு குதிரை காலனி வடிவ சுரங்கங்கள், 158.5 மீட்டர் உயரம் கொண்ட சாலைப் பாலத்தை கடந்து இதில் பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications