உத்தரபிரதேசம்: இந்தியாவில் ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட பெரும் பதவிகளுக்கு செல்ல வேண்டிய செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் பல்வேறு கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பதையும் தேர்வு எழுதுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அது எதுவுமே இல்லாமல் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமம் இந்தியாவின் ஐஏஎஸ் கிராமமாக உருவெடுத்து இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜான்பூர் மாவட்டத்தில் இருக்கிறது மாதோபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தை அனைவரும் ஐஏஎஸ் ஃபேக்டரி என அழைக்கிறார்கள். ஏனெனில் இந்த கிராமத்தில் மொத்தம் 75 வீடுகள் தான் இருக்கின்றன ஆனால் இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாகி இருக்கிறார்கள். இந்தியாவிலேயே எந்த ஒரு கிராமமும் சாதிக்காத ஒரு விஷயத்தை இந்த கிராமம் சாதித்து காட்டியிருக்கிறது.

இந்த கிராமத்தில் மொத்தமே ஒரு தெரு தான் இருக்கிறது. இதில் 75 வீடுகள் இருக்கின்றன இங்கிருந்து 50க்கும் அதிகமான ஐஏஎஸ் ஐபிஎஸ் , ஐ ஆர் எஸ் அதிகாரிகள் உருவாகி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் வசித்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகி தாகூர் பகவதி திங் சிங் மற்றும் அவருடைய மனைவி சியாம்ரதி சிங் ஆகியோர்தான் இந்த கிராமத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் .
1917 ஆம் ஆண்டு இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து பாடம் எடுத்து அடிப்படை கல்வியை வழங்கியிருக்கிறார் சியாம்ரதி சிங் .அப்போது முதலில் குழந்தைகளின் மனதில் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை விதைத்து வந்திருக்கிறார். அதுதான் தற்போது பெரிய பலனை தந்திருக்கிறது .அந்த கிராமத்திலிருந்து முதன்முறையாக ஒரு இளைஞர் ஐஎஃப்எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இதனை அடுத்து அடுத்த ஆண்டு ஒரு நபர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியிருக்கிறார்.

பின்னர் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக மாறியிருக்கிறார்கள். இது அந்த கிராமத்தை சேர்ந்த பலருக்கும் தங்களுடைய பிள்ளைகளை ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர்நிலை அதிகார பதவிகளுக்கு கொண்டுவர வேண்டுமென்று எண்ணத்தை விதைத்திருக்கிறது. எனவே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே இதை சொல்லி சொல்லி தான் வளர்ப்பார்களாம்.
மகன் மகள் என தாண்டி தங்கள் வீட்டிற்கு வரக்கூடிய மருமகள் மருமகன்களை கூட அவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு படிக்கும்படி ஊக்குவிப்பார்களாம் . இந்த கிராமத்தில் பெரிய கோச்சிங் சென்டர் அல்லது பெரிய அளவிலான பள்ளிகளோ மையங்களோ கிடையாது ஆனாலும் இங்க இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய சொந்த உழைப்பாலும் படிப்பாலும் மட்டுமே இந்த பதவிகளுக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
தற்போது ஓய்வு பெற்றிருக்கும் முன்னாள் அதிகாரிகள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள் இந்த கிராமத்தை சேர்ந்த யாரேனும் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் அந்த கிராமமே கொண்டாடுமாம் ஒரு வேளை அவர் தோல்வி அடைந்தால் அடுத்த முறை தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குமாம்.


Click it and Unblock the Notifications