போலாந்து நிறுவனத்தை வாங்கும் பார்லே.. பிரிட்டானியா உடன் போட்டி..!

இந்திய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே ப்ராடக்ட்ஸ், போலந்தைச் சேர்ந்த டாக்டர் ஜெரார்ட் என்னும் நிறுவனத்தைத் தனியார் ஈக்விட்டி நிறுவனமான பிரிட்ஜ்பாயிண்ட் -யிடம் இருந்து வாங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவின் முன்னணி பிஸ்கட் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் பிரிட்டானியா ஆப்பிரிக்காவில் ஒரு தொழிற்சாலையைக் கைப்பற்றியது.

தற்போது இதைப் பாதையில் பார்லே ப்ராடக்ட்ஸ் பயணிக்கத் துவங்கியுள்ளது.

டாக்டர் ஜெரார்ட்

டாக்டர் ஜெரார்ட்

1993 இல் நிறுவப்பட்ட டாக்டர் ஜெரார்ட் 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு பிஸ்கட்டுகள் மற்றும் உப்புத் தின்பண்டங்களைத் தயாரித்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. பிரிட்ஜ்பாயிண்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் டாக்டர் ஜெரார்ட் நிறுவனத்தை வாங்குவது மூலம் பார்லே நிறுவனம் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.

12 பில்லியன் ரூபாய்

12 பில்லியன் ரூபாய்

டாக்டர் ஜெரார்டின் மதிப்பு 10 பில்லியன் முதல் 12 பில்லியன் ரூபாய் ($121.72 மில்லியன் முதல் $146.07 மில்லியன் வரை) என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கைப்பற்றல் திட்டத்தை ஆலோசனை செய்யும் போது இதன் மதிப்பு 24 பில்லியன் ரூபாய் வரை உயரவும் வாய்ப்புகள் உள்ளது.

பிரிட்ஜ்பாயிண்ட்

பிரிட்ஜ்பாயிண்ட்

2013 ஆம் ஆண்டில் பிரான்சின் குரூப் பவுல்ட்-யிடம் இருந்து டாக்டர் ஜெரார்ட் நிறுவனத்தைப் பிரிட்ஜ்பாயிண்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் போர் விற்பனை கணிசமாகக் குறைக்கும் முன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வணிகத்திலிருந்து வெளியேற முதலீட்டு வங்கியான Houlihan Lokey நியமித்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டானியா

பிரிட்டானியா

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் உற்பத்தியாளரான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஆப்பிரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கென்யா-வில் சில ஆப்ரேஷன்ஸ்-ஐ வாங்க சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது.

20 மில்லியன் டாலர் டீல்

20 மில்லியன் டாலர் டீல்

நைரோபியை தளமாகக் கொண்ட கெனாஃப்ரிக் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து கென்யாவில் கேடலிஸ்ட் கேபிட்டல் முதலீட்டில் இயங்கும் பிரிட்டானியா ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை 20 மில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்தது.

 130 ஆண்டு நிறுவனம்

130 ஆண்டு நிறுவனம்

பிரிட்டானியா 130 ஆண்டுப் பழமையான நிறுவனமாகும், இந்தியாவில் குட் டே மற்றும் மேரி கோல்ட் பிஸ்கட்கள் முக்கியப் பிராண்டுகளில் ஒன்றாகும். ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் உள்நாட்டில் செய்யக்கூடிய பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கவும் விரும்பும் நிலையில் பிரிட்டானியா தனது உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை ஆப்பிரிக்காவில் மேம்படுத்த இந்நிறுவனத்தை வாங்கியது.

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா

பிரிட்டானியா நிறுவனம் சமீபத்தில் எகிப்து மற்றும் உகாண்டாவில் ஒப்பந்த அடிப்படையில் பேக்கிங் வசதிகளை அமைத்தது, மேலும் கென்யா மற்றும் நைஜீரியா-வில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+