இந்தியாவில் கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு எரிபொருளுக்காக டிமாண்ட் பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் உற்பத்தி துறை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் காரணத்தால் எரிபொருள் விலை மாறாமல் தொடர்ந்து அதேவிலையில் விற்பனை செய்யப்படுவதால் டிமாண்ட் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பிப்ரவரி மாதம் இந்தியாவின் எரிபொருள் டிமாண்ட் கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு நாளுக்கான தேவை என்பது 4.82 மில்லியன் பேரல் ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 15 மாதங்களாக இந்தியாவில் தொடர்ந்து எரிபொருள் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது.
எண்ணெய் அமைச்சகம்
இதற்கிடையில் மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் Petroleum Planning and Analysis Cell திரட்டிய தரவுகள் படி இந்தியாவில் எரிபொருள் டிமாண்ட் 1998ஆம் ஆண்டு டிமாண்ட் அளவீட்டை எட்டியுள்ளது எந தெரிவித்துள்ளது.
எரிபொருள் டிமாண்ட்
இந்தியாவில் ஒருபக்கம் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மறுபுறம் உள்நாட்டு நுகர்வு அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் வருகையில் அதிகரிப்பும், அதன் மூலம் அதிகப்படியான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்து ரீடைல் விற்பனையகங்களில் நிரப்பி வைக்கப்பட்டு உள்ள காரணத்தால் எரிபொருள் டிமாண்ட் பிப்ரவரி மாதம் கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு நாளுக்கான தேவை என்பது 4.82 மில்லியன் பேரல் ஆக உயர்ந்துள்ளது.
5.17 மில்லியன் பேரல்
இந்த நிலை தொடர்ந்தால் மார்ச் மாதம் இந்தியாவில் ஒரு நாளுக்கான எரிபொருள் தேவை என்பது 5.17 மில்லியன் பேரல் ஆக உயரும். ஆனால் பருவகால அடிப்படையில் ஏப்ரல் - மே மாதத்தில் இந்த ஒரு ஒரு நாளுக்கான எரிபொருள் தேவையின் அளவு 5 மில்லியன் பேரல் ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல், டீசல் நுகர்வு
பிப்ரவரி மாதம் இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு அளவு என்பது 8.9 சதவீதம் அதிகரித்து 2.8 மில்லியன் டன்களாக உள்ளது. டீசல் நுகர்வு 7.5 சதவீதம் அதிகரித்து 6.98 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இதேபோல் விமானத்தில் பயன்படுத்தும் ஜெட் எரிபொருள் 43 சதவீதம் அதிகரித்து 0.62 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.
ஜெட் எரிபொருள்
2023 ஆம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் விமானத்தில் பயன்படுத்தும் ஜெட் எரிபொருளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவை அதிகளவிலான நுகர்வு அளவீட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீடைல் எரிபொருள் விற்பனை
ஆனால் ரீடைல் எரிபொருள் விற்பனை தரவுகளை பார்க்கும் போது ஜனவரி மாதத்தை விடவும் பிப்ரவரி மாதம் விற்பனை குறைவாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பிப்ரவரி மாதத்தில் 28 நாள் என்பது தான் என Wood Mackenzie நிறுவனத்தின் துணை தலைவர் Alan Gelder தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் ஒரு நாளுக்கான சராசரி எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
எல்பிஜி விற்பனை
இதே பிப்ரவரி 2023 உடன் பிப்ரவரி 2022-ஐ ஒப்பிடுகையில் எல்பிஜி விற்பனை 0.1 சதவீதம் சரிந்து 2.39 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. மேலும் சாலைகளை அமைக்க பயன்படும் bitumen விற்பனை ஜனவரி மாதத்தை விடவும் பிப்ரவரி மாதம் 21.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications