டெல்லி: இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை 2020ம் நிதியாண்டில், ஒரு நாளைக்கு 8% குறைந்து 4,594 பேரல்கள் குறையலாம் என்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தெரிவித்துள்ளது.
இதே நாட்டில் பெட்ரோல் தேவையானது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒரு நாளைக்கு 350 ஆயிரம் பேரல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளது.
எரிபொருள் தேவை குறையும்
இதன் காரணமாக பெட்ரோல் தேவை ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 60 சதவீதம் வீழ்ச்சி காணும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. இதே டீசல் தேவையானது இரண்டாவது காலாண்டில் ஒரு நாளைக்கு 690 பீப்பாய்கள் குறையும் என்றும் கணித்துள்ளது. எரிபொருள் மற்றும் மண்ணெய் தேவையானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டதட்ட 40 சதவீதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விமான எரிபொருள் தேவை குறைகிறது
மண்ணெய் தேவையில் பாதி எரிபொருளாகப் பயன்படுகிறது. ஆனால் தற்போது விமான சேவை கடுமையான கட்டுப்பாடுகளால் மோசமாக பாதிக்கப்படும் என்றும் ஐஇஏ தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த எண்ணெய் தேவை 2020ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4.60 மில்லியன் பீப்பாய்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி குறையும்
இது கடந்த 2019ம் நிதியாண்டில் 5.01 மில்லியன் பேரல்களாக ஒரு நாளைக்கு தேவை இருந்தது. இதே போல 2020ம் நிதியாண்டில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியானது தொடர்ந்து குறையும் என்றும் இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் முதிர்ந்த வயல்களில் கிணறுகளின் செயல்திறன் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
உற்பத்தி குறைவாக இருக்கும்
மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக தொழிலாளர்கள் கடலோரப் பகுதிகளுக்குள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். ஆக இதுவும் ஒரு காரணியாக இருந்தது. ஆக வரும் மாதங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியானது குறைவாகத் தான் இருக்கும். அதே நேரம் இறக்குமதியும் 12.4 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இறக்குமதியும் சரியும்
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இறக்குமதி சரிந்துள்ளது. இதே எண்ணெய் பொருட்கள் இறக்குமதியும் 6.5 சதவீதம் குறைந்து 3.35 மில்லியன் டன் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் லாக்டவுன் காரணமாக சரிந்ததாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

எரியும் நெருப்பில் எண்ணெய்! நயாராவின் 35 நாள் முடக்கம்.. இந்தியாவின் நிலை என்னவாகும்?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications