கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் OPEC நாடுகள் அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காகவும், 2020ல் ஏற்பட்ட வர்த்தகச் சரிவை ஈடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது மட்டும் அல்லாமல் ஏப்ரல் மாதமும் இதில் எவ்விதமான தளர்வு அளிக்க முடியாது என அறிவித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் இதன் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு இறக்குமதிகளை அதிகளவில் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் பாதித்துள்ளது.
இதன் வாயிலாக இந்தியா கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சவுதி மற்றும் கிழக்கு இந்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவீட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெய்க்காக மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையிலையைக் கைவிட வேண்டும் என்றும் மாற்று வழிகளைக் கண்டறியவும் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இதேநேரத்தில் எண்ணெய் வள துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் அளவு நாட்டுக்கு மிகப்பெரிய சக்தி எனப் பல முறை கூறியுள்ளார். இதைத் தற்போது சரியான முறையில் பயன்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
OPEC அமைப்பு
இந்தியா, OPEC அமைப்பிடம் உற்பத்தியை அதிகரிக்கக் கோரிக்கையும் விடுத்தும் ஏற்காத நிலையில் இந்தியா மாற்று வழியைத் தேட துவங்கியுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முழுமையாகத் தற்போது இருகக்கும் அளவீட்டையும், சவுதி மே மாதம் முதல் 25 சதவீதம் கூடுதலாகவும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
கொள்முதல் பவர்
இன்நிலையில் இந்தியா தனது கொள்முதல் பவர்-ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் வர்த்தகத்தை இழப்பது என்பது சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இறக்குமதி குறைப்பு
அந்த வகையில் இந்தியா தற்போது மாதம் 14.7 முதல் 14.8 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்-ஐ OPEC நாடுகளிடம் இருந்து வாங்கும் நிலையில் இந்த அளவீட்டை 10.8 மில்லியன் பேரல் ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த வர்த்தகக் குறைப்பு அரபு நாடுகளுக்குப் பெரும் இழப்பாக இருக்கும்.
இந்தியாவின் பவர் பளே
இதேவேளையில் இனி வரும் காலத்தில் அரபு நாடுகளில் இருந்தும் வாங்கும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துவிட்டு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டு உள்ளது இந்தியா.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications