இந்திய பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த காரணத்தால் அனைத்து துறைகளிலும் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் பண்டிகை கால வர்த்தகத்திற்காக இந்தியாவின் உற்பத்தி துறையும் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன் எதிரொலியாக செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 8.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய ஜிடிபி
2020 செப்டம்பர் காலாண்டில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வர்த்தகம், உற்பத்தி, சேவை என அனைத்து துறையும் முடங்கியிருந்தது. இதன் காரணமாக லோ பேஸ் எபக்ட் மூலம் இந்தியாவின் ஜிடிபி 8.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்திய பொருளாதாரம் -7 சதவீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று
தற்போது ஏற்பட்டு உள்ள பொருளாதார வளர்ச்சி என்பது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து மக்களும், வர்த்தக சந்தையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை காட்டுக்கிறது. மேலும் இக்காலக்கட்டத்தில் வேக்சின் அதிகரிப்பு வர்த்தக சந்தையில் வளர்ச்சிக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
5,73,451 கோடி ரூபாய்
இந்த வளர்ச்சியின் மூலம் 2020 செப்டம்பர் காலாண்டில் 35,61,530 கோடி ரூபாயாக இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது 35,73,451 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் நாமினல் ஜிடிபி வளர்ச்சி 17.5 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சிக்கு முக்கிய காரணம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமாக மத்திய அரசின் அதிகப்படியான செலவினங்கள் அதன் மூலம் உருவான பணபுழக்கம் மற்றும் குறைவாக இருந்த வட்டி விகிதம் ஆகியவை பெரிய அளவில் உதவியது.
உற்பத்தி மற்றும் தொழிற்துறை
மேலும் இந்தியாவின் 8 முக்கிய துறையில் வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 7.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் வெறும் 4.5 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் -0.5 சதவீதமாக இருந்தது.
8 முக்கிய துறைகள்
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் 8 முக்கிய துறையில் வளர்ச்சி அளவீடுகள்
நிலக்கரி - 14.6 சதவீதம் வளர்ச்சி
கச்சா எண்ணெய் - 2.2 சதவீதம் சரிவு
இயற்கை எரிவாயு - 25.8 சதவீதம் வளர்ச்சி
சுத்திகரிப்பு பொருட்கள் - 14.4 சதவீதம் வளர்ச்சி
விவசாய உரம் - 0.04 சதவீதம் வளர்ச்சி
ஸ்டீல் - 2.8 சதவீதம் வளர்ச்சி
சிமெண்ட் - 11.3 சதவீதம் வளர்ச்சி
மின்சாரம் - 0.9 சதவீதம் வளர்ச்சி
இந்தியாவின் உள்கட்டமைப்பு துறை ஏப்ரல் - அக்டோபர் வரையில் சுமார் 15.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications