இன்று காலை முதல் அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜிடிபி தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜிடிபி அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைச்சகம் அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டு உள்ளது.
சந்தை கணிப்புகள் அடிப்படையில் இன்று காலை தமிழ் குட்ரிட்டனஸ் 5 சதவீதத்திற்குக் கீழ் தான் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடைந்திருக்கும் என கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாலை வெளியான மத்திய புள்ளியியல் அமைச்சக அறிவிப்பில் இக்காலாண்டில் 4.4 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜிடிபி
இந்தியாவின் ஜிடிபி அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைச்சகம் அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டு உள்ளது.
2023 நிதியாண்டு வளர்ச்சி
இந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புக்கு இணையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம்
இதோடு மத்திய புள்ளியியல் அமைச்சகம் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 8.7 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
நிலையான நாணய மதிப்பு
மேலும் நிலையான நாணய மதிப்பீட்டில் 2022-23 ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 40.19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது 2021-22 ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 38.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 4.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போதைய நாணய மதிப்பு
மேலும் தற்போதைய நாணய மதிப்பீட்டில் கணக்கிட்டால் 2022-23 ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 69.38 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது 2021-22 ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 62.39 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆர்பிஐ வட்டி விகிதம்
இந்தியாவின் ஜிடிபி அளவு குறைய மிக முக்கியமான காரணம் பணவீக்கத்தை குறைக்க ஆர்பிஐ தொடர்ந்து அதிகரிக்கும் வட்டி விகிதம் தான். இதோடு கடந்த ஆண்டு பேஸ் எபக்ட் மூலம் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது இந்த நிலை மாறியுள்ளது.
உற்பத்தி துறை
இக்காலாண்டில் இந்தியாவின் உற்பத்தி துறை டிசம்பர் காலாண்டில் 1.1 சதவீதம் சரிந்துள்ளது, முந்தைய காலாண்டில் 3.6 சதவீதம் சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாய துறை
மேலும் விவசாய துறை செப்டம்பர் காலாண்டில் 2.4 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 3.7 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது.
உணவு பணவீக்கத்தை
பருவமழை-க்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் வேளையில் வறட்சி போன்ற நிலைமை உருவாகும் என்ற கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் எல் நினோ விளைவுகள் மூலம் இந்தியாவில் உணவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற கவலைகள் நாடு முழுவதும் அதிகமாகியுள்ளது. இது அடுத்த நிதியாண்டில் பெரும் பாதிப்பை பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications