உலகளாவிய பொருளாதாரங்கள் தற்போது போருக்கு பின்பு, கொரோனா வைரஸ் என்னும் வடிவில் வந்து, மீண்டும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினை குறைக்கும் விதமாக எதிர்பாராதவாறு, நாடு தழுவிய லாக்டவுன் சில மாதங்களாக செய்யட்டது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையும் நின்று போனாது என்றே கூறலாம்.
மீண்டு வருவதற்கான அறிகுறி
எனினும் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது மீண்டும் பொருளாதாரம் மீண்டு வர வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் தான் இந்த தளர்வுகள் அளிக்க தொடங்கியது அரசு. இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டு வருவதற்காக அறிகுறிகளைக் காண முடிகிறது.
நம்பிக்கையை தூண்டியுள்ளது
ஆனால் இது குழப்பமான கட்டத்திற்குள் நுழையும்போது இந்த அறிகுறிகள் மீண்டும் தற்போது குறைந்து வருகின்றன. எனினும் அரசாங்கம் படிப்படியாக லாக்டவுனை தளர்த்துவது சில காலாண்டுகளில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கையை தூண்டியுள்ளது. ஆனால் திறக்கப்பட்ட நிவாரணம் மங்கிய பின்னர், பொருளாதாரம் என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மந்த நிலையில் பொருளாதாரம்
ஏனெனில் தொழில் துறை சார்ந்த பர்சேசிங் மேனேஜர்ஸ் குறியீடு, எரிபொருள் விற்பனை குறியீடுகள் போன்ற மதிப்பிடுகள் ஜூலை மாதத்தில் சரிவினையே கண்டுள்ளன. இது வர்த்தக நடவடிக்கை மந்த நிலையில் உள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
இந்தியாவின் வளர்ச்சி
அண்மையில் நாம் கண்டிருக்க கூடிய பொருளாதார தரவுகளில் எந்தவொருமுன்னேற்றமும், தீவிர வீழ்ச்சியினை தொடர்ந்து, இயல்பாக்கலின் ஒரு பிரதிபலிப்பாகும். எனினும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் இதுபோன்ற வளர்ச்சியினை கண்டிருக்க வாய்ப்பில்லை என்று கோல்ட்மேன் சாச்சஸின் இந்தியாவின் தலைமை பொருளாதார வல்லுனர் பிராச்சி மிஸ்ரா கூறியுள்ளார்.
ஜிடிபியை ஊக்குவிக்க எந்தவொரு சக்தியும் இல்லை
பெரிய அளவிலான ஆதரவு திட்டங்களை, செயல்படுத்த இந்தியாவின் நிர்வாக மற்றும் நிதி திறன் குறித்து கடன் மதிப்பீட்டு முகவர் நிறுவனங்கள் கவலைப்படுவதாக மிஸ்ரா கூறியுள்ளார். கொள்கை ஆதரவு மற்றும் அதிகரித்து வரும் தேவை காரணமாக 2021ம் ஆண்டில் இந்தியா ஒரு ஊக்கத்தினை பெற முடியும் என்றாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க, எந்தவொரு அடிப்படை சக்தியும் இல்லை என்பது மிஸ்ராவின் கருத்து.
ஜிடிபி குறையும்
2021ம் நிதியாண்டில் ரியல் ஜிடிபி 4.4% ஆக குறையலாம் என்று எதிர்பார்ப்பதாக மிஸ்ரா கூறியுள்ளார். இது 1980க்கு பிறகு மிக மோசமான ரெசசன் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தியில் உலக பொருளாதார நடவடிக்கைகளில், கொரோனா தடுப்பூசி என்ற பச்சை தளிர்களால் ஈடு செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய மொத்த உள் நாட்டு உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. எனினும் இந்தியா பொருளாதாரம் அந்த பாதையில் செல்லுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications