மும்பை: இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது தான் மீண்டு வர ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் 2022ம் நிதியாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி 10.1% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கணித்துள்ளது.
உண்மையில் நடப்பு ஆண்டிலேயே வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்ட நிலையில், அடுத்த ஆண்டில் ஆவது மீள்ச்சி காணுமா? எவ்வளவு மீள்ச்சி காணுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

பொருளாதார வளர்ச்சி விகிதம்
நடப்பு நிதியாண்டில் கொரோனாவுக்கு மத்தியில் பொருளாதாரம் பெரும் சரிவினைக் கண்டிருந்தாலும், தற்போது கொரோனாவுக்காக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது நிச்சயம் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2022ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிப்பு
இது பல மடங்கு வேகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகின்றது. முக்கிய துறைகள் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நுகர்வும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தற்போது கொரோணாவுக்கு முந்தைய நிலையை அடைய தொடங்கியுள்ளது.

பணவீக்கம் இலக்கு
இதன் காரணமாக வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு இந்த மதிப்பீட்டு நிறுவனம் நுகர்வோர் விலைக் குறியீடு 2022ம் நிதியாண்டில் 4.6% ஆக குறையலாம் என்றும் கணித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் 6.4% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. அதோடு மத்திய வங்கியும் 4% ஆக இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிபற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
இதே சில்லறை உணவு பணவீக்கம் 2022ம் நிதியாண்டில் 4.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 8% என்றும் மதிப்பிட்டுள்ளது. அதே நேரம் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் மாற்றம் இருக்காது என்றும் கணித்துள்ளது. எனினும் நடப்பு ஆண்டில் வருவாய் குறையும் என்பதால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 12 - 12.5% ஆக இருக்கலாம் என்றும், இதே 2022ம் நிதியாண்டில் 8.5% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.