இந்தியா கொரோனா பாதிப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் 2020ன் கடைசிக் காலாண்டில் வர்த்தக வளர்ச்சி அடையத் துவங்கியது.
இதன் எதிரொலியாக ஜனவரி மாதத்திலும் நாட்டின் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் சந்தை சிறப்பாக இருந்த காரணத்தால் பொருளாதார மந்த நிலையில் இருந்த இந்தியா 2021ல் மீளத் துவங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் வகையில் 8 முக்கிய ஹெய் ப்ரீக்குவென்சி காரணிகளை ஆய்வு செய்த ப்ளூம்பெர்க், 8ல் இரண்டு வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல 5 காரணிகள் டிசம்பர் மாதத்தின் அளவீட்டையே ஜனவரியிலும் உள்ளது. ஒரு காரணி மட்டும் சரிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் ஏற்பட்டு உள்ள இந்த உயர்வு புத்தாண்டின் முதல் காலாண்டுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் டிசம்பர் காலாண்டு உடன் நாட்டின் பொருளாதார மந்த நிலையில் நிலைப்பெற்று உள்ளது.
இந்நிலையில் அரசு ஜனவரி மாத தரவுகளை வெள்ளிக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனவரி மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டை விடவும் 0.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது ப்ளூம்பெர்க்.
இதேபோல் மார்கிட் இந்தியா சர்வீசஸ் வெளியிடும் பிஎம்ஐ குறியீடு கடந்த மாதம் 52.3 புள்ளிகளாக இருந்த நிலையில் தற்போது ஜனவரி மாதத்தில் 52.8 புள்ளிகளாக உள்ளது. பொதுவாகப் பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்பது பொருள்.
மேலும் நாட்டின் உற்பத்தி அளவீடுகள் டிசம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஜனவரி மாதம் பல துறைகளில் ஏற்றுமதி அளவீடுகள் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது குறிப்பிட்தக்கது.


Click it and Unblock the Notifications