ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு என்பது மிகவும் வலிமையான ஒன்று. இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருவது அதற்கு சாதகமான ஒன்று அதனை தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகள் சில, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன. ஆனால் இந்தியாவோ வழக்கமாக வாங்கும் எண்ணெயை விட அதிகளவில் வாங்கியது.
சொல்லப்போனால் கூடுதலாக தள்ளுபடி விலையில் வாங்கியது தான் ட்விஸ்டே.
விரிவாக்கம் செய்ய பாடுபட்டு
இந்தியாவுக்கு பின்னர் தற்போது பல நாடுகளும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ரஷ்யாவில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்த மத்திய அமைச்சர், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பாடுபட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
எண்ணெய் தொடர்ந்து வாங்கி வரும் இந்தியா
ஆரம்பத்தில் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வந்த நிலையில், அது குறித்து பல மேற்கத்திய நாடுகளும் தங்களது அதிருப்தியினை காட்டின. எனினும் மக்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டியது எங்களின் கடமை என்று கூறிய இந்தியா, தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகின்றது.
வணிக விரிவாக்க திட்டம்
எண்ணெய் வணிகம் மட்டும் அல்ல, பல்வேறு வகையிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இரு தரப்புகளும் முன்பை விட பல்வேறு வணிகத்தினை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். இது நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை மேம்படுத்தும். இதுவே இரு அரசுகளின் நோக்கமாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் தாக்கம்
ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தம், நிதி பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. எனினும் இது மீட்சியைடைய தொடங்கிய நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் தாக்கம் உள்ளது. இதுவும் சர்வதேச வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீர்குலைக்கும் தாக்கம்
பயங்கரவாதம் மற்றும் காலநிலை போன்றவற்றால் பிரச்சனைகள் உள்ளன. இவை இரண்டும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் சீர்குலைக்கும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
எங்கள் பேச்சுகள் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்றும் கூறினார்.
எங்களின் நோக்கம்
இருதரப்பு உறவுகளைப் பொறுத்தமட்டில், சமகால, சம நிலையான, பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களில், நீண்டகால ஈடுபாட்டை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
குறிப்பாக நமது பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும்போது, இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டாயமாகும். எங்களுடைய பகிரப்பட்ட இலக்குகள் எப்படி அடையப்படுகின்றன என்பது பற்றி விவாதிப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
நீண்டகால உறவு
நீண்டகாலமாகவே இந்தியா ரஷ்யா உறவானது வலுவாக இருந்து வருகின்றது. இது பாரம்பரிய நட்பாக இருந்து வருகின்றது. அது உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் இன்னும் வலுவடைந்துள்ளது. வணிக ரீதியாகவும் மேம்பட்டுள்ளது. சீனாவுடனான முக்கியத்துவத்தினை குறைக்க முடியாமல் இருந்து வரும் இந்தியாவுக்கு, ஆரம்ப காலத்தில் இருந்தே ரஷ்யாவின் நட்பானது மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகின்றது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications