இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பலன் கொடுக்கும் விதமாக இந்தியாவின் சில்லறை பணவீக்கமானது சற்றே குறைந்துள்ளது. இது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
எனினும் இது தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்புக்கு மேலாக இருப்பது கவலையளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் 6.52% ஆக இருந்த சில்லறை பணவீக்கமானது, ஜனவரி மாதத்தில் 6.44% ஆக குறைந்துள்ளது. எனினும் இது தொடர்ந்து 6% மேலாக உள்ளது கவலையளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
வட்டி அதிகரிப்பு இருக்கலாம்
சில்லறை பணவீக்க தரவின் மத்தியில் மத்திய வங்கியானது தொடர்ந்து தனது வட்டி அதிகரிப்பினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து உணவு பொருட்கள் விலையானது பெரியளவில் சரியாத நிலையில் இது பணவீக்கத்திற்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகிறது.
CPI தரவு
நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது கடந்த ஜனவரி மாதத்தில் 6.52% ஆக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் 6.02% ஆக குறைந்துள்ளது. இது சர்வதேச சந்தையில் தொடர்ந்து விலையானது சற்றே மென்மையாகத் தொடங்கியுள்ள நிலையில் குறைந்துள்ளது. மேலும் அரசும் சப்ளையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கிடையில் தான் சிபிஐ தரவானது சற்றே குறைந்துள்ளது. எனினும் சில்லறை விற்பனையில் அது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் தான் சில்லறை பணவீக்க தரவானது தொடர்ந்து 6% மேலாகவே இருந்து வருகின்றது.
முக்கிய பணவீக்கம்
ரிசர்வ் வங்கி சமீபத்திய கூட்டத்தில் முக்கிய பணவீக்கம் என்பது இன்னும் உச்சத்திலேயே உள்ளதை சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் வட்டி அதிகரிப்பினை செய்யலாம். கடந்த பிப்ரவரி மாதத்தில் சிபிஐ முக்கிய பணவீக்க விகிதமானது 6.1% ஆகவும் இருந்தது.
பணவீக்கம்
உணவு பணவீக்கம் என்பது கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.95% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 6% ஆக இருந்தது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தவிர, மற்ற மாதங்களில் சில்லரை பணவீக்கம் என்பது தொடர்ந்து 6% மேலாகவே இருந்து வருகின்றது. இது நடப்பு நிதியாண்டில் முன்னதாக 6.7% ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இது பிறகு 6.5% ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இலக்கு
ரிசர்வ் வங்கியானது பணவீக்கத்தின் மதிப்பு 4% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இது அதிகபட்சமாக இருபுறமும் 2% வரையில் கூடுதலாகவும் குறைவாகவும் செல்லலாம்.
கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி இவ்வங்கி 250 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.5% ஆக அதிகரிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications