இந்தியாவின் சில்லறை பணவீக்கமானது அல்லது நுகர்வோர் விலை குறியீடு மார்ச் மாதத்தில், 15 மாத சரிவாக 5.66% எட்டியுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.44% ஆக இருந்தது. இது ரிசர்வ் வங்கி 4 - 6% ஆக நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி விகிதமானது, 5.6% ஆக அதிகரித்துள்ளது. இதே ஜனவரியில் 5.2% ஆக அதிகரித்துள்ளது.

இதே உணவு பணவீக்கமானது 4.79% ஆக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தது. இதே பிப்ரவரி மாதத்தில் 5.95% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 7.68% ஆக இருந்தது.
இதே சில்லறை பணவீக்க விகிதமானது டிசம்பர் 2022ல் 5.7% ஆக இருந்தது. இது தானியங்கள், பால் மற்றும் பழங்கள், அதிக பணவீக்கம் மற்றும் காய்கறிகள் விலையில், மெதுவான விலை விகிதம் காரணமாக பின்னணியில் சில்லறை பணவீக்கம் 2022 டிசம்பரில் 5.7% ஆக அதிகரித்துள்ளது. இதே பிப்ரவரி 2023ல் 6.4% ஆக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 2023 - 24ம் நிதியாண்டில் சிபிஐ பணவீக்கம் 5.2% ஆக மதிப்பிட்டுள்ளது. இது முதல் காலாண்டில் 5.1% ஆகவும், 2வது காலாண்டில் 5.4% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 5.4% ஆகவும், 4வது காலாண்டில் 5.2% ஆகவும் கணித்துள்ளது.

தொடர்ந்து சர்வதேச பொருளாதாரமானது சரிவினைக் கண்டு வரும் நிலையிலும், இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சி காணலாம் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இதற்கிடையில் பணவீக்கமும் குறைந்து வரும் சூழலில், இது பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியலாம்.
இது பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
அரசும் பணவீக்கத்தினை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அரசும் சப்ளையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அதன் பலனாக பணவீக்கமும் குறைந்துள்ளது. இது இனி வரவிருக்கும் மாதங்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி இவ்வங்கி 250 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications