அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. காய்கறிகள் விலை சரிவு.. சில்லறை பணவீக்கம் 4.06% ஆக குறைவு.. !

டெல்லி: காய்கறிகளின் விலை குறைவினால் கடந்த ஜனவரி மாத சில்லறை பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

இது உண்மையில் மிக நல்ல விஷயமே. இது குறித்து மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஜனவரி மாத சில்லறை பணவீக்க விகிதம் 4.06 சதவீதமாக கூறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதே நுகர்வோர் விலை குறை குறியீட்டு விகிதம் கடந்த டிசம்பர் 2020ல் 4.59 சதவீதமாவும் உள்ளது.

அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. காய்கறிகள் விலை சரிவு.. சில்லறை பணவீக்கம் 4.06% ஆக குறைவு.. !

கடந்த ஜனவரி மாதத்தில் இறைச்சி மற்றும் மீன்களின் பணவீக்க விகிதம் 12.54 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் அதே நேரம் காய்கறிகளின் பணவீக்க விகிதம் 15.84 சதவீதம் குறைந்துள்ளது. இதே சர்க்கரை மிட்டாய் விகிதம் 0.26 சதவீதமும் குறைந்துள்ளது. இதே பழங்கள் பணவீக்கம் 4.96 சதவீதம் அதிகரித்தும் உள்ளது. இது தவிர முட்டை 12.85 சதவீதமும், இதே பால் பொருட்கள் 2.73 சதவீதமும், ஆயில் மற்றும் கொழுப்புகளின் பணவீக்கம் 19.71 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இதே நுகர்வோர் விலை குறியீடானது கடந்த டிசம்பர் 2020ல் 4.59 சதவீதமாக இருந்த நிலையில், ஜனவரியில் 4.06 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் சில்லறை பணவீக்க விகிதம், உணவு பணவீக்க விகிதத்தினையும் காட்டுகிறது. குறிப்பாக பருப்பு வகைகள் தவிர உணவு பணவீக்கமானது, கடந்த ஜனவரியில் 1.89 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த டிசம்பரில் 3.41 சதவீதமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக மிதமான போக்கில் இருந்து வரும் பணவீக்க விகிதம் வளர்ச்சி வழிவகுத்தாலும், இது இப்படியே தொடருமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனினும் தற்போது அதிகரித்து வரும் உணவுப் பொருட்கள் விலை, நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆக இதனால் அடுத்து வரும் மாதங்களிலும் இந்த சில்லறை பணவீக்க விகிதம் குறையுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் விலைவாசி குறைந்தால் அது நல்ல விஷயம் தானே. இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மொத்தத்தில் இது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+