இந்தியாவின் சில்லறை விற்பனை குறித்தான பணவீக்கம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் 5.72% ஆக குறைந்துள்ளது.
இந்த சில்லறை பணவீக்கம் விகிதமானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது சரிவில் காணப்படுகின்றது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு கீழாக வந்துள்ளது மற்றொரு நல்ல விஷயமாகும். இதுவும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பணவீக்க விகிதம் குறைந்ததற்கு உணவு பொருட்கள் விலையானது குறைந்ததே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கு 2 - 6% ஆகும். கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் என்பது 6.77% ஆக இருந்தது. இது கடந்த நவம்பரில் 5.88% ஆக இருந்தது. டிசம்பர் மாதத்தில் முந்தைய மாதத்தை விட குறைந்து, 5.72% ஆக குறைந்துள்ளது. இது பொருளாதாரத்திற்கும் சாதகமாக காரணியாகவும் பார்க்கப்படுகின்றது.
அரசின் இலக்கு
மார்ச் 2026ல் முடிவடையும் ஐந்தாண்டு காலத்திற்கு சில்லறை பனவீக்கத்தை 4% எனும் அளவில் பராமரிக்க வேண்டும். அதிகரித்தாலும் 6% மேல் அதிகரிக்க கூடாது. குறைந்தாலும் 2% கீழாக இல்லாமல் இருபுறம் 2% என்ற அளவினை பராமரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
என்ன காரணம்?
சில்லறை பணவீக்க விகிதமானது இந்த அளவுக்கு குறைந்துள்ளதற்கு காரணம், உணவு பொருட்கள் விலையானது சரிவினைக் கண்டுள்ளது தான். எனினும் காய்கறிகளின் விலையானது குறைந்துள்ளது முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு பணவீக்கத்தினை கொண்டு வர உறுதுணையாக இருந்தது எனலாம்.
உணவு பணவீக்கம்
பணவீக்கத்தில், உணவு பணவீக்கம் என்பது சுமார் 40% அளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் 4.19% ஆக இருந்தது. இது முந்தைய மாதத்தில் 4.67% ஆக இருந்தது.
நிபுணர்களின் கருத்து
இக்ரா நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர், நாங்கள் 4வது காலாண்டி முக்கிய பணவீக்க விகிதங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது. தொடர்ந்து மூலதன செலவினங்களானது அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு உற்பத்தி செலவினங்களை அதிகரிக்கலாம். தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இது பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம்.
ஜனவரி மாத நிலவரம்
ஜனவரி மாதத்தில் நுகர்வோர் விலை குறியீடானது 5.8 - 6% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது டிசம்பர் மாதத்தினை விட சற்று அதிகமாக இருக்கலாம். உணவு பணவீக்கம் உள்ளிட்ட பல முக்கிய பணவீக்கமும் அதிகரிக்கலாம். இதனால் ஜனவரி மாதத்தில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி
தொழிற்துறை உற்பத்தி குறியீடானது நவம்பர் மாதத்தில் 7.1% ஆக அதிகரித்துள்ளது.. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 4% ஆக இருந்தது. இதுவும் இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதை காட்டுகிறது எனலாம். இது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு இன்னும் சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications