பணவீக்கம் உயரும் அபாயம்.. அடுத்த 3 மாதம் மக்களுக்கு மிகவும் மோசமான காலம்..!

சாமானிய மக்களை நேரடியாகப் பாதிக்கும் சில்லறை பணவீக்கத்தின் அளவு அக்டோபர் மாதம் 6 வருட உயர்வை அடைந்த நிலையில், நாட்டில் பருவமழையின் அளவு பல இடங்களில் அளவுக்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் விவசாயப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் தற்போது சமையல் எண்ணெய் இறக்குமதி விலை அதிகமான காரணத்தால் அடுத்த 3 மாதத்திற்கு நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் அதிகமாக இருக்கும் எனவும் இதனால் சாமானிய மக்களின் பர்ஸ் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சில்லறை விலை பணவீக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் விலைவாசி அதிகமாக இருக்கும், அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைவாசி மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் சாமானிய மக்கள் மட்டும் அல்லாமல் நடுத்தர மக்களுக்கும் பெரிய அளவிலான பாதிப்பை நிதியியலில் ஏற்படுத்தும்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஏற்கனவே மக்களைக் கொரோனா மற்றும் அதன் எதிரொலியால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றின் மூலம் கடுமையான பாதிப்புகள் எதிர்கொண்ட நிலையில் தற்போது ரீடைல் பணவீக்கம் நாட்டு மக்களைப் பயமுறுத்த வந்துள்ளது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

ஏப்ரல்- ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் - 8 சதவீத வீழ்ச்சி ஏற்படும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் ரெசிஷனில் செல்லும் என்ற அச்சம் இருக்கும் நிலையில் பணவீக்கம் என்ற புதிய பிரச்சனை வெடித்துள்ளது.

 

உணவுப் பொருட்கள்

உணவுப் பொருட்கள்

ரீடைல் பணவீக்கத்தில் வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டை, மாமிசம், தக்காளி போன்ற அடிப்படை உணவுப் பொருட்கள் சுமார் 46 சதவீதம் பங்கு வகிக்கிறது. அக்டோபர் மாதம் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 11.07 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்தது.

9 மாத உயர்வு

9 மாத உயர்வு

தற்போது வெளியாகியுள்ள கணிப்பின் படி கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது எனக் கூறப்படும் நிலையில் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பவில்லை, நாட்டின் பணவீக்கமும் குறையவில்லை.

தற்போது நாட்டின் ரீடைல் பணவீக்கத்தின் அளவு 7.61 சதவீதமாக உள்ளது. இது கடந்த 9 மாத உயர்வாகும்.

 

விலைவாசி

விலைவாசி

இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் வெங்காயம் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் சோயா ஆயில் 23 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா காலத்தில் பல உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை அடைந்து மக்களை வாட்டி வதைத்தது.

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய்

இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 70 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதி மூலம் ஈடு செய்யும் நிலையில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் சமையல் எண்ணெய் அதிகளவில் உயர்ந்துள்ள காரணத்தால் இதன் விலை இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

இதேபோல் முட்டை, மாமிசம் போன்ற அனைத்து அடிப்படை உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இதனால் அடுத்த 3 மாதத்திற்கு நாட்டின் ரீடைல் பணவீக்கம் உச்சத்தில் தான் இருக்கும். இதனால் மக்கள் வீட்டுத் தேவைக்காக வாங்கும் பொருட்களுக்கு அதிகளவிலான பணத்தைச் செலவு செய்ய வேண்டிய மோசமான சூழ்நிலை உருவாகும்.

உஷாரா இருங்க பாஸ்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+