நிலம், வீடுகளில் முதலீடு செய்ய வேண்டுமெனில் இப்போதே முதலீடு செய்யுங்கள்.. 2034க்குள் இது நடக்கபோகுது

இந்தியாவின் ரீடெய்ல் துறை கடந்த பத்து ஆண்டுகளில், எதிர்ப்பாராத அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு மக்களின் நகர்ப்புற குடியேற்றம் அதிகரித்தது, அதிகரித்து வரும் செலவழிக்கக்கூடிய வருமானங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையை நோக்கிய மாற்றம், அதாவது சிறு கடைகள் முதல் பெரிய மால்கள் வரை புதிய ரீடெய்ல் வடிவங்கள் உருவாகி வருவது ஆகியவையே முக்கிய காரணமாக உள்ளன.

நிலம், வீடுகளில் முதலீடு செய்ய வேண்டுமெனில் இப்போதே முதலீடு செய்யுங்கள்.. 2034க்குள் இது நடக்கபோகுது

உலகின் மிகப்பெரிய நுகர்வோர் தளங்களில் ஒன்றான இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறை, மாறிவரும் வாழ்க்கை முறைகள், பிரீமியம் தயாரிப்புகளுக்கான(உயர்தரப் பொருட்களுக்கு ) தேவை அதிகரிப்பு மற்றும் இ-காமர்ஸ் வளர்ச்சி, ஆன்லைன் ஷாப்பிங், மற்றும் டிஜிட்டல் பேமென்ட் முறைகளின் அதிகரிப்பு உள்ளிட்டவைகளில் ஏற்பட்ட எழுச்சி ஆகியவற்றால் தூண்டப்பட்டு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கூடுதலாக, மூலத்தள வளர்ச்சி (Infrastructure Development), சாதகமான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவைகள் இந்திய ரீடெய்ல் துறையின் விரைவான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றன. இந்த காரணங்களால் இந்திய ரீடெய்ல் ரியல் எஸ்டேட் சந்தை எதிர்வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Boston Consulting Group (BCG) மற்றும் Retailers Association of India (RAI) வெளியிட்ட அறிக்கையின் படி, 2024-ம் ஆண்டில், இந்தியாவின் ரீடெய்ல் சந்தை மதிப்பு ₹82 லட்சம் கோடி ஆக உள்ளது. 2034-க்குள், இந்த மதிப்பு இருமடங்காக அதிகரித்து ₹190 லட்சம் கோடியை கடந்துவிடும் என கணிக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி இந்திய ரீடெய்ல் துறைக்கு உலகளவில் ஒரு முக்கிய இடத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறை ஆண்டுக்கு 8.9 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியடைந்துள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் ரூ.35 லட்சம் கோடியாக இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் (Pandemic) காலத்தை தவிர, கடந்த 10 ஆண்டுகளில் நுகர்வு வளர்ச்சி தொடர்ந்து வலுவாக இருந்துள்ளது. 2024-2034 காலக்கட்டத்தில், இந்த வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

சில்லறை விற்பனை வளர்ச்சியில் மிகப்பெரிய எழுச்சி: இந்தியாவின் சில்லறை விற்பனைத் துறை நம்பமுடியாத வேகத்தில் வளர்ந்து வருவதாகவும், இந்த மாற்றத்தின் மையமாக மால்கள் உள்ளன என்றும் ஆம்பியன்ஸ் குழுமத்தின் இயக்குனர் அர்ஜுன் கெலாட் கூறினார். இன்றைய காலத்தில், ஷாப்பிங் செய்வது பரிவர்த்தனைகளைப் பற்றியது மட்டுமல்ல, அனுபவங்களைப் பற்றியது.

நகர்ப்புற மக்கள் உயர்தர ஷாப்பிங் அனுபவங்களை நாடுகின்றனர். இதனால், சர்வதேச மற்றும் பிரீமியம் பிராண்டுகளுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது. மூலதன வசதிகள் & உள்கட்டமைப்பு மேம்பாடு (Strategic Real Estate Developments), ஆகியவற்றால், நொய்டா மற்றும் குருகிராம் நகரங்கள் இந்தியாவின் முக்கிய ரீடெய்ல் ஹப்களாக மாறிவருகின்றன. நொய்டா, அதன் அதிகரிக்கும் நகர்ப்புற மக்கள் தொகை, மேம்பட்ட மெட்ரோ இணைப்பு, மற்றும் வரவிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு திட்டங்களால், முன்னணி ரிடெய்லர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது.

மேலும், நொய்டா, மக்களின் மாறிவரும் ஷாப்பிங் பழக்கங்களுக்கு ஏற்ப பிரீமியம் மால்கள், ஹை-ஸ்ட்ரீட் ரிடெய்ல், மற்றும் மிக்ஸ்-யூஸ் டெவலப்மென்ட்ஸ் ஆகியவற்றில் அதிக வளர்ச்சியைக் காண்கிறது. இதேபோல், குருகிராம், அதன் நிறுவனங்கள் நிறைந்த பொருளாதார சூழல் மற்றும் உயர் வருமானம் கொண்ட மக்கள் தொகையின் காரணமாக, லக்க்ஷுரி ரிடெய்ல், அனுபவமிக்க ஷாப்பிங் மற்றும் பிரீமியம் ஹை-ஸ்ட்ரீட் வணிக வளாகங்களுக்கு அதிகமான தேவை உருவாகியுள்ளது என்று அர்ஜுன் கெலாட் கூறினார்.

"தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவதும், ஈடுபாட்டுடன் கூடிய சூழல்களை உருவாக்குவதும்தான் சவால் என்பதை எங்கள் குழுமம் புரிந்துகொள்கிறது என்றும் உயர்தர பிராண்டுகள், சிறந்த உள்கட்டமைப்பு, வசதியான அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் சிறந்த வணிக சூழல் உருவாக்கி வருகிறோம் என்றும் ரிடெய்ல் துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மால்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பிராண்டுகளுக்கு சிறப்பான ப்ரெஸென்ஸ், அதிக வாடிக்கையாளர் வரத்து மற்றும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவதை மால்கள் உறுதி செய்கின்றன. இந்நோக்குடன், நாங்கள் பிரீமியம் மற்றும் அனுபவ மிக்க வணிக வளாகங்களை உருவாக்கி, ரீடெய்ல் துறையின் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்துவதை உறுதி செய்கிறோம் என்றும் மேலும் அவர் கூறினார்.

பிரீமியம் ரீடெய்ல் இடங்களின் அதிகரிக்கும் தேவை: அதிகரிக்கும் நுகர்வோர் தேவை (Rising Consumer Demand), பிராண்டுகளின் விரிவாக்கம் (Brand Expansion), மாறிவரும் ஷாப்பிங் பழக்கவழக்கங்கள் (Shifting Shopping Preferences) ஆகியவற்றால் இந்தியாவின் ரீடெய்ல் துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்கிறது என Group 108 நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சித் பூத்தானி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி-NCR இல், குறிப்பாக நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே & நொய்டா நீட்டிப்பில், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பிராண்டுகள் விரிவாக்கத்திற்கான சிறந்த இடங்களைத் தேடுவதால் பிரீமியம் சில்லறை விற்பனை இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இந்தப் பகுதி ( corridor) மிக வேகமாக ஒரு முக்கிய ரிடெய்ல் மையமாக உருவாகியுள்ளது, மேலும் ஆஸ்பிரேஷனல் ஷாப்பர்கள் (Aspirational Shoppers) மற்றும் உயர்ந்த வருமானத்தினைப் பெற்ற குடியிருப்புகளை தகுந்தவாறு சேவையளிக்கும் ஹை-ஸ்ட்ரீட் (High-Street) வணிக தளங்கள் உருவாகி வருகின்றன. நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே & நொய்டா எக்ஸ்டென்ஷன் பகுதி, சிறந்த போக்குவரத்து இணைப்புகள் (Seamless Connectivity) மற்றும் வணிக வளர்ச்சிக்கான நேர்முக சூழலுடன் (Thriving Ecosystem) இந்தியாவின் முன்னணி ரிடெய்ல் மையங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது என்று பூத்தானி மேலும் தெரிவித்துள்ளார்.

Sundream Group CEO ஹர்ஷ் குப்தா கூறுகையில், நொய்டாவில் Grade A ரீடெய்ல் இடங்களின் வேகமான வளர்ச்சி, அதன் நகர்ப்புற வளர்ச்சியையும், உயர்ந்த நுகர்வோர் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்துகிறது," என்றும் இந்த வேகமான வளர்ச்சியின் மத்தியில் சர்வதேச பிராண்டுகளை உடைய உலகத்தர ரீடெய்ல் சூழலை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று அவர் கூறினார்.

இதேபோல், நகர்ப்புற வளர்ச்சியும், உயர் செலவீன திறன் கொண்ட வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கமும், அதிகரிக்கும் நுகர்வோர் தேவையைத் தூண்டி, பல்வேறு பொருட்கோடுகளில் (categories) அதிகமான செலவினங்களை உருவாக்குகிறது," என Spectrum@Metro நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் (Vice President, Sales & Marketing) அஜேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

"ஈ-காமர்ஸ் வளர்ச்சி மற்றும் Omnichannel ரீடெய்ல் தளவமைப்புகள், ஷாப்பிங் அனுபவத்தை மாறிக்கொள்ளச் செய்கின்றன. மால்கள், ஹை-ஸ்ட்ரீட் ரீடெய்ல், மற்றும் மிக்ச்டு-யூஸ் (Mixed-Use) திட்டங்கள் போன்ற வலுவான ரீடெய்ல் உள்கட்டமைப்பு வளர்ச்சி, வணிகங்களின் அணுகல் தன்மையையும் வாடிக்கையாளர் ஈடுபாட்டையும் அதிகரிக்கிறது." இதுமட்டுமல்லாமல், "நொய்டாவின் விரிவடையும் ரீடெய்ல் சந்தை, ஹை-ஸ்ட்ரீட் ஷாப்பிங் மற்றும் பிரீமியம் மால்களுக்கான முக்கிய இடமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

உயரும் தனிநபர் செலவீனத் திறனும், அனுபவமிக்க (Experiential) வாழ்க்கை முறையின் வளர்ச்சி ஆகியவற்றால், மால்கள் வாழ்வியல், சமூக மற்றும் கலாச்சார மையங்களாக பரிணாமம் அடைகின்றன. நோய்டாவின் வலுவான இணைப்புத் திறனும், நவீன உள்கட்டமைப்பும், முன்னணி பிராண்டுகளுக்கும் ஷாப்பர்களுக்கும் முக்கிய ரீடெய்ல் ஹாட்ஸ்பாட் ஆக தொடர்ந்து வலுவாக இருக்கும் என்றும் அஜேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.

Take a Poll

பிரபலமான சில்லறை விற்பனை நிலையமான குருகிராம், இந்த வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது, துவாரகா எக்ஸ்பிரஸ்வே போன்ற பகுதிகள் விரும்பப்படும் சில்லறை வணிக வழித்தடங்களாக உருவாகி வருகின்றன. "உலகளாவிய பிராண்டுகள் மற்றும் வணிகங்கள் தங்களின் இருப்பிடங்களை (footprint) விரிவுபடுத்துவதால், உயர்தர ரீடெய்ல் இடங்களுக்கு தேவையும் அதிகரிக்கிறது. இதனால், அனுபவமிக்க (experiential) மற்றும் சமூகத்துடன் இணைந்த (community-driven) வணிக மாதிரிகள் முன்னிலையிலிருக்கின்றன," என Ocus குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரகாஷ் மெஹ்தா தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+