இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் என்றவுடன் நாம் அனைவரும் நினைப்பது எம்எஸ் தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தான். ஆனால் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருப்பவர்கள் இந்த 3 பேரில் யாருமே இல்லை என்பது தான் உண்மை. அப்போ யார் இந்த பணக்கார கிரிக்கெட் வீரர்.
எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோர் எல்லாம் 1000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தடுமாறி வரும் வேளையில், இந்த ஒரு கிரிக்கெட்டர் மட்டும் எப்படி 20000 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார். இந்த கிரிக்கெட் வீரர் யார்..? இவருடைய பின்புலம் என்ன..?

பரோடா அரச குடும்பத்தைச் சேர்ந்த சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் தான் 20000 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கும் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர். இவர் பரோடாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், பரோடா கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் நிர்வாகியும் ஆவார்.
சமர்ஜித்சிங் 1987-88 மற்றும் 1988-89 காலக்கட்டங்களுக்கு இடையே நடந்த ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக ஆறு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி மொத்த 119 ரன்களையும் அதிகப்படியாக 65 ரன்களுடன் எடுத்துள்ளார்.

சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி ரஞ்சித்சிங் பிரதாப்சிங் கெய்க்வாட் மற்றும் சுபாங்கினிராஜே ஆகியோருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். அவர் டெஹ்ராடூன்-ல் இருக்கும் பிரபலமான தி டூன் பள்ளியில் படித்தார், அங்கு அவர் ஒரே நேரத்தில் இப்பள்ளியின் கிரிக்கெட், கால்பந்து மற்றும் டென்னிஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்தார்.
மே 2012 இல் அவரது தந்தை இறந்த பிறகு, 22 ஜூன் 2012 அன்று லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படியான விழாவில் சமர்ஜித்சிங் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார். அவர் 2013 இல் தனது மாமா சங்க்ராம்சிங் கெய்க்வாட் உடன் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரை சொத்து குறித்த 23 ஆண்டுகால சட்டப்பூர்வ போராட்டத்தில் வெற்றிகண்டதை தொடர்ந்து பெரும் பணக்காரராக உயர்ந்தார்.

சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் கட்டுப்பாட்டில் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மட்டும் அல்லாமல் 600 ஏக்கரில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளது. இதோடு வதோதராவில் உள்ள மோதி பாக் ஸ்டேடியம் மற்றும் மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகமும் அவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதனுடன் ரவி வர்மாவின் ஓவியங்கள், தங்கம், வெள்ளி, வைரம், ராஜ பரம்பரை நகைகள், பல அசையும் சொத்துகளும் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications