நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பீதியினை அடுத்து இந்திய சந்தைகள் வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டு வருகின்றன.
இந்த நிலையில் சிறு முதலீட்டாளர்கள் முதல் பல பெரிய முதலீட்டாளர்கள் வரை, இந்திய பங்கு சந்தையில் பல ஆயிரம் முதல் பல ஆயிரம் கோடிகள் வரை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பங்கு சந்தையில் கடுமையான இழப்பினை சந்தித்துள்ள பில்லியனர்கள் லிஸ்டினை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதன் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தான் இந்த இழப்பிலும் முதலிடத்தில் உள்ளார்.
நிகர சந்தை மதிப்பு வீழ்ச்சி
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தினை இழந்துள்ளார். வியாழக்கிழமையன்று பங்கு சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவின்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையில் 52 வார விலை குறைவான அளவிற்கு சரிந்தது. இதன் காரணமாக நிகர சந்தை மதிப்பு 40.2 பில்லியன் டாலராக குறைந்தது.
சொத்து மதிப்பு வீழ்ச்சி
வியாழக்கிழமையன்று பிஎஸ்இ-யில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையானது ஒரே நாளில் 91.6 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 1,153.25 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது 1,049.50 ரூபாயாக குறைந்து, அதன் 52 வார குறைந்த பட்ச விலையை தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 8% வீழ்ச்சி கண்டுள்ளது.
ராதாகிஷன் தமனிக்கு நஷ்டம்
இதையடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள ராதாகிஷன் தமனியும், அவரது குடும்பத்தினரும் 828 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் பங்கு விலையானது 5% வீழ்ச்சி கண்டுள்ளது. வியாழக்கிழமையன்று மட்டும் ஒரே நாளில் பிஎஸ்இ-யில் 106 ரூபாய் குறைந்து, 2,124 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது 2,018 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது
ஷிவ் நாடார் சொத்து மதிப்பு
இதே போல இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் சொத்து மதிப்பானது 1.1 பில்லியன் டாலர் குறைந்து 13.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனத்தின்பங்கு விலையானது 44 ரூபாய் குறைந்து 492.90 ரூபாயாக வியாழக்கிழமையன்று முடிவடைந்துள்ளது. இதன் முந்தைய நாள் முடிவு விலை 536.86 ரூபாயாகும். ஆக மொத்தம் 8.18% வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கதக்கது.
உதய் கோட்டக் சொத்து மதிப்பு
இதே வங்கித்துறையில் முன்னணியாளரான உதய் கோட்டக்கின் சொத்து மதிப்பு 867 மில்லியன் டாலர் குறைந்து, 12.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. வியாழக்கிழமையன்று கோடாக் மகேந்திரா பங்கின் விலையானது 7.72% வீழ்ச்சி கண்டு 1,466 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அன்று மட்டும் சுமார் 122 ரூபாய் இந்த பங்கின் விலை வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுனில் மித்தலின் சந்தை மதிப்பு
இதையடுத்து பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் மித்தலும் அவரது குடும்பத்தினரும் 596 மில்லியன் டாலரினை இழந்து, அவரின் சொத்து மதிப்பானது 9.5 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று மட்டும் பார்தி ஏர்டெல்லின் பங்கு விலையானது 5.82% வீழ்ச்சி கண்டு 464.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. அன்று மட்டும் சுமார் 28 ரூபாய் பங்கின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
சன் பார்மா சொத்து மதிப்பு
இதையடுத்து சன் பார்மா நிறுவனர் திலீப் சங்வி வியாழக்கிழமையன்று மட்டும் 693 மில்லியன் டாலரினை இழந்து, அவரின் சந்தை சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இவரினை அடுத்து ஆதித்யா குழுமத்தினை சேர்ந்த குமார் பிர்லா 593 மில்லியனை இழந்தும், அவரின் சொத்து மதிப்பு 8.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
சொத்து மதிப்பு வீழ்ச்சி
இதே இந்தியாவின் இரும்பு ஜாம்பாவான் ஆன ஆர்செலர் மிட்டலின் தலைவர் லட்சுமி மிட்டல் 526 மில்லியனை இழந்து, அவரின் சொத்து மதிப்பு 8.5 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இவரை அடுத்து பெனு கோபால் பங்குர், நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி, சைரஸ் பூனாவாலா உள்ளிட்ட பலர் மில்லியன் கணக்கில் தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளனர்.
தற்போதைய பங்கு சந்தை நிலவரம்
இந்த நிலையில் இன்று காலையில் பலமான வீழ்ச்சியினைக் கண்டு, லோவர் சர்கியூட் ஆன நிலையில், தற்போது சென்செக்ஸ் 922 புள்ளிகள் அதிகரித்து 33,709 ஆகவும், இதே நிஃப்டி 256 புள்ளிகள் அதிகரித்து 9,846 ஆகவும் அதிகரித்து வர்த்தகமாகியுள்ளது. இதே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 73.93 ரூபாயாக சற்று அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications