2018-19ஆம் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு விபரங்களை நாட்டின் 7 தேசிய கட்சிகளும், 41 மாநிலக் கட்சிகளும் சமர்ப்பித்துள்ள நிலையில் அதிகச் சொத்து மதிப்புடைய அரசியல் கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
மொத்தம் 48 அரசியல் கட்சிகள் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு அறிக்கையின் படி மொத்த சொத்து மதிப்பு 7,372.96 கோடி ரூபாய். இதில் 7 தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு 5,349.25 கோடி ரூபாயாகவும், மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு 2,023.71 கோடி ரூபாயாக உள்ளது.

7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பான 5,349.25 கோடி ரூபாயில் சுமார் 54.29 சதவீதம் ஒரு கட்சியிடம் மட்டும் உள்ளது.. அது எந்தக் கட்சி..?
2018-19ஆம் நிதியாண்டின் நிலவரத்தின் படி 7 தேசிய கட்சிகள் மத்தியில் 3வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சுமார் 738 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3வது இடத்திலும், காங்கிரஸ் கட்சி 928.84 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் மத்தியில் ஆளும் கட்சியான பிஜேபி 2,904.18 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது என Association for Democratic Reforms தெரிவித்துள்ளது.
இதேபோல் மாநிலக் கட்சிகள் பிரிவில் 3வது இடத்தில் அதிமுக 206.75 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளது. 2வது இடத்தில் பிஜூ ஜனதா தல் கட்சி 232.27 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளது. இதேபோல் முதல் இடத்தில் சமாஜ்வாடி கட்சி 572.21 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளது.
மேலும் 48 கட்சிகளின் மொத்த கடன் மற்றும் நிலுவை அளவீடு 213.231 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications