உலகிலேயே மிகவும் நீளமான பேருந்து பயணம் இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. பல ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் இதுதான் நிலைமை லண்டனில் இருந்து கொல்கத்தா வரையில் சுமார் 110 நாட்களில் உலகின் மிக நீளமான பயணத்தை மேற்கொண்ட ஒரு பேருந்தின் கதையைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். முன்பு மாட்டு வண்டி, நடைப்பயணம் என்று தங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த மக்கள் படிப்படியாக பேருந்து பயணத்திற்கு தயாராகி வந்த காலம் அது.
லண்டனில் உள்ள விக்டோரியா கோச் ஸ்டேஷனில் இருந்த மக்கள், லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்வதற்கு வரிசையில் நிற்பதை காட்டும் புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த புகைப்படம் ஏப்ரல் 15-ஆம் தேதி 1957-ஆம் ஆண்டுக்கு முந்தையதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வெளியான புகைப்படத்தில் இருக்கும் பேருந்தில் லண்டன்-கொல்கத்தா-லண்டன் என்ற பாதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1950-ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கும். லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கும் செல்வதற்கு இந்த ஒரு பேருந்து தான் பயன்பட்டது. ஆல்பர்ட் என்ற பெயர் கொண்ட இந்தப் பேருந்து சுமார் 21 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது.
ஆல்பர்ட் பேருந்து இந்தியா முழுவதும் பயணம் செய்வதற்கு 5 நாட்கள் ஆனது. அப்போது ஒரு டிக்கெட் விலை 85 பவுண்டுகளாக இருந்தது. மேலும் போகும் ஊரிலிருந்து மீண்டும் திரும்புவதற்கு 65 பவுண்டுகளுக்கு டிக்கெட் விற்பனையானது. அதே கட்டணம் இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.7,963 ஆகவும், திரும்பும் பயணத்திற்கு ரூ.6,089 ஆகவும் இருந்திருக்கும்.
லண்டன், பெல்ஜியம், வெஸ்ட் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா டர்க்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் பாகிஸ்தான் இறுதியாக இந்தியா வரை செல்லும் வழித்தடத்தை காட்டும் வகையிலான புகைப்படமும் ஆன்லைனில் பரவியது. இதற்கான டிக்கெட் கட்டணம் பயணம், உணவு மற்றும் தங்கும் இடம் உட்பட 145 பவுண்டுகள் செலவாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்புக்கு 13,590 ரூபாய். இந்தியாவில் டெல்லி, அலகாபாத், பனாரஸ் போன்ற நகரங்களைக் கடந்து இறுதி இலக்கான கொல்கத்தாவை ஆல்பர்ட் பேருந்து அடைந்தது.
ஆல்பர்ட் பேருந்தில் பயணம் செய்யும்போது மிகவும் வசதியாக பயணிக்க, கீழ்த் தளத்தில் புத்தகங்கள் வாசிப்பதற்கும், உணவருந்துவதற்கும் அறை இருந்தது. மேல் தளத்தில் பயணிகள் வேடிக்கை பார்த்து கொண்டே பயணம் செய்யலாம். அதோடு அனைத்து வசதிகளுடன் கூடிய சமையல் அறையும் இருந்தது. மேலும் பார்ட்டிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மேலும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஷாஜகானின் மைல் சிம்மாசனம், டெல்லியில் உள்ள ராஜ்பாத் ஆகிய இடங்களையும் ரசித்துக்கொண்டே பயணம் செய்யும் வகையில் இருந்தது
இருப்பினும் நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவு இருப்பது போல ஆல்பர்ட் பேருந்திற்க்கும் ஒரு முடிவு வந்தது. சென்ட்ரல் வெஸ்டர்ன் டெய்லி அறிக்கையினபடி பேருந்தின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டதால் ஆல்பர்ட் பேருந்து சேவையிலிருந்து நீக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் பயணியான ஆண்டி ஸ்டீவர்ட்டால் ஆல்பர்ட் பேருந்து வாங்கப்பட்டது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications