கல்வி என்பது ஒரு நாட்டுக்கு அடித்தளமாகும். ஆனால் தற்போது பள்ளி சேர்க்கை குறைந்து வருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி சேர்க்கை 2022 முதல் 2023-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2022-ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களை காட்டிலும் சுமார் 37 லட்சம் மாணவர்கள் 2024-ஆம் ஆண்டில் குறைந்துள்ளனர்.
கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறை தரவுகளை சேகரித்து ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக செயல்பட்டு வருகிறது, இந்த தளத்தின் தரவுகள் தான் இத்தகைய அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. 2022 முதல் 2023-ஆம் ஆண்டில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.17 கோடியாக இருந்தது. ஆனால் 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24.80 கோடியாகக் குறைந்தது. இந்த குறைவில் 16 லட்சம் பெண் மாணவர்களும் 21 லட்சம் ஆண் மாணவர்களும் அடங்குவர்.

பொருளாதார வளர்ச்சி: தற்போது பள்ளிகளில் அட்மிஷன் குறைந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பள்ளிகளில் அட்மிஷன் குறைந்தால் திறமையான தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறையலாம். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு திறமையான தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இது போன்ற தொழிலாளர்கள் இல்லாவிட்டால் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த முடியாமல் போகும் அபாயமும் ஏற்படும். இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கலாம்.
சிறுபான்மையின மாணவர்கள் மொத்த சேர்க்கையில் சுமார் 20 சதவீதமாகும். இதில் 79.6 சதவீத முஸ்லிம்கள், 10 சதவீத கிறிஸ்தவர்கள், 6.9 சதவீத சீக்கியர்கள், 2.2 சதவீத பௌத்தர்கள், 1.3 சதவீத சமணர்கள் மற்றும் 0.1 சதவீத பார்சிகள் ஆகியோர் அடங்குவர்.
அதோடு UDISE+ தளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களில் 26.9% பேர் பொது பிரிவை சேர்ந்த மாணவர்கள், 18 சதவீத பேர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். 9.9% பேர் பழங்குடியினர் மற்றும் 45.2% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். UDISE+ அமைப்பு 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் மாணவர் வாரியாக டேட்டாக்களை சேகரித்து வைக்கும் செயல் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு மாணவரிடமும் தாமாக வந்து ஆதார் எண்களை சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் 19.7 கோடி மாணவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை வழங்கி அரசின் சலுகைகளை சிறப்பாக ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்தனர்.
இந்த புதிய டேட்டா சேகரிப்பு வசதியின் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. தற்போது கூட அதை வைத்து தான் மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ள விவரங்களை நாம் செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய கல்வியை அடைவதற்கு ஒரு முன் முயற்சியாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
வெளியான அறிக்கை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கூறியுள்ளது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் அதிகமான பள்ளிகள் உள்ளன. ஆனால் பதிவு செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்கு நேர்மாறாக தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாணவர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறைவான பள்ளிகள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications