இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே டெல்லி மற்றும் மும்பை இடையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே இரண்டு நகரங்களுக்கிடையே கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த எக்ஸ்பிரஸ்வேயின் குறிப்பிட்ட பகுதி பாலைவனத்தின் மீது கட்டப்படுவது தான் இந்த திட்டத்தின் தனித்துவமாகும்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகர் வரை 1,316 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்கப்பட்ட வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த எக்ஸ்பிரஸ்வேயின் ஒரு குறிப்பிட்ட பகுதியானது பாலைவனத்தின் மீது கட்டப்பட உள்ளது. இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் பஞ்சாப் மற்றும் குஜராத் இடையிலான போக்குவரத்து நேரம் தற்போது இருப்பதை விட பாதியாக குறையும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்த சாலை பணிகளில் பகுதி அளவு பணியை முடித்துள்ளது , 2025 டிசம்பர் மாதம் பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகள் ரீதியாக இது மிக முக்கியமான எக்ஸ்பிரஸ்வேயாக கருதப்படுகிறது. இந்த சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் ராஜஸ்தானில் பாலைவனத்தின் மீது கட்டப்படுகிறது. இதன் நீளம் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்.
இந்த சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில் இந்தியாவின் தொழிற்சாலை மையமான அமிர்தசரஸ் மற்றும் குஜராத்தின் ஜாம்நகர் இடையிலான போக்குவரத்து இன்னும் எளிதாகிவிடும். தற்போது அமிர்தசரஸில் இருந்து ஜாம்நகருக்கு 1516 கிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது.
இதனை கடக்க 26 மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே செயல்பாட்டுக்கு வரும்போது இந்த தொலைவு என்பது 216 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறையும் பயண நேரமும் 13 மணி நேரங்களாக குறைந்த விடும். இதற்கு முக்கிய காரணம் இந்த எக்ஸ்பிரஸ்வேயில் வாகனங்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
அமிர்தசரஸ் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி என்.சி.ஆர் பகுதியை சேர்ந்த மக்களும் பயனடையலாம். அதாவது பஞ்சாப் ,டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரம் என்பது கணிசமாக குறையும் . இந்த எக்ஸ்பிரஸ்வே டெல்லி காத்ரா எக்ஸ்பிரஸ்வேயுடன் இணைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் இருந்து காஷ்மீர் வரையிலும் பயண நேரம் கணிசமாக குறைந்துவிடும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications