இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் சேவைத் துறை டிசம்பர் மாதத்துடன் 5 மாதம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆனால் நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தின் வளர்ச்சி அளவீடுகள் சற்று குறைவாகவே உள்ளது. இந்த நிலைக்கு என்ன காரணம் தெரியுமா..?
பணவீக்கம் பெரும் பிரச்சனை
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் சேவைத் துறைக்கு அதிக வளர்ச்சி வாய்ப்புகள் இருந்தும் இதன் மூலம் சரிவை சந்தித்துள்ளது. பணவீக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது, இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பல முக்கியமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆர்பிஐ இலக்கு
இந்தியாவின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் இலக்கு அளவீடுகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் நாட்டின் வேகமான வளர்ச்சிக்குப் பணவீக்க அளவீட்டை குறைக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதனால் இறக்குமதி வரியை குறைப்பதில் இருந்து பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தல் வரையில் பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
IHS மார்கிட்
இந்நிலையில் இன்று வெளியான IHS மார்கிட் அமைப்பின் சேவைத் துறையின் PMI அளவீட்டில் நவம்பர் மாதம் 58.1 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் மாதம் 55.5 சதவீதமாக உள்ளது. நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது டிசம்பர் மாதம் பெரும் சரிவை எதிர்கொண்டு இருந்தாலும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
PMI குறியீடு அளவு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது என்பது பொருள்.
பொலியானா டி லிமா
இந்திய சேவை துறை குறித்து IHS மார்கிட் அமைப்பின் பொருளாதாரத் துணை தலைவர் பொலியானா டி லிமா கூறுகையில் 2021ஆம் ஆண்டு இந்திய சேவை துறைக்குத் தடுமாற்றம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. ஆனால் டிசம்பர் மாதம் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
2021 ஓகே...
இதேவேளையில் 2021ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சேவை துறையின் விற்பனை மற்றும் வர்த்தகம் சிறப்பான முறையில் உயர்ந்துள்ளது எனப் பொலியானா டி லிமா கூறியுள்ளார்.
புதிய வர்த்தகங்கள்
இதேபோல் இந்தியாவின் புதிய வர்த்தகங்களின் குறியீடு 5வது மாதமாக 50 புள்ளிகளுக்கும் அதிகமாக உள்ளது. இப்பிரிவு வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் மற்றும் பிற சேவை துறைகள் பெரிய அளவில் உதவியுள்ளது. ஆனாலும் டிசம்பர் மாதத்தில் 3 மாத சரிவைப் பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications