தங்கம் தான் வாங்க முடியலனு பார்த்தா!! வெள்ளிக்கும் ஆப்பு வைத்த மத்திய அரசு!!

தங்கம் சாமானிய மக்களால் எளிதாக வாங்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தது 1.4 லட்சம் ரூபாய் தேவை. தங்கம் தான் வாங்க முடியவில்லை வெள்ளியாவது வாங்கலாமே என பார்த்தால் வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து நிற்கிறது.

வெள்ளியை நகையாக வாங்க முடியவில்லை என்றால் என்ன ஈடிஎஃப் போன்ற வடிவங்களிலாவது வாங்கி வைக்கலாம் என ஏராளமான மக்கள் சில்வர் ஈடிஎஃப்களில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்த வெள்ளி முதலீடுகளுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெள்ளி பார்கள் அதாவது வெள்ளி கட்டிகள் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதித்துள்ளது.

தங்கம் தான் வாங்க முடியலனு பார்த்தா!! வெள்ளிக்கும் ஆப்பு வைத்த மத்திய அரசு!!

வெள்ளி பார்களை 'தடையற்ற' பிரிவில் இருந்து 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவுக்கு மாற்றியுள்ளது. எனவே வெள்ளி பார்கள் இறக்குமதி செய்ய இனி அரசின் உரிமம் தேவைப்படும். மத்திய அரசு அன்னிய செலவாணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றாலும் இதன் மூலம் ஏற்படும் தாக்கம் முதலீட்டாளர்களை தான் பாதிக்கும்.

குறிப்பாக வெள்ளி ETF மற்றும் சில்வர் பீஸ்-களின் விலைகள் உயரும். அதாவது வெள்ளி ஈடிஎஃப், பீஸ் ஆகியவற்றில் நாம் முதலீடு செய்யும் போது அந்த நிறுவனங்கள் அதற்கு நிகரான வெள்ளி பார்களாக தான் அவற்றை சேமிக்கின்றன. இந்நிலையில் தான் வெள்ளி பார்கள் மற்றும் பல்வேறு வெள்ளி பொருட்களை 'கட்டுப்படுத்தப்பட்ட' பிரிவுக்கு அரசு மாற்றியுள்ளது. இதற்கு முன்பு இவை 'தடையற்ற' இறக்குமதி பிரிவில் இருந்தன.

தற்போது வெள்ளி ETFகள் ஸ்பாட் விலை அதாவது நேரடி சந்தை விலை அல்லது NAV (நிகர சொத்து மதிப்பு)ஐ விட தள்ளுபடி விலையில் வர்த்தகம் ஆகின்றன. உதாரணமாக, சில்வர் ETF ஒரு யூனிட்டுக்கு 250 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது, தற்போது அதன் NAV 254 ரூபாயாக இருந்தது. ஆனால் அரசின் இந்தப் புதிய இறக்குமதி கட்டுப்பாட்டின் காரணமாக இந்தியாவில் வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்படும் என, முதலீட்டாளர்கள் ETFகளை அதிகம் வாங்குவார்கள். இதனால் ETFகள் விலை பிரீமியத்துக்கு அதாவது ஸ்பாட் விலையை விட உயரும்.

எனவே புதிதாக சிலவர் ஈடிஎஃப்களில் முதலீடு செய்வோருக்கு அதிக செலவை ஏற்படுத்தும். அதாவது முன்பை விட கூடுதல் தொகைக்கு வெள்ளி வாங்க வேண்டி இருக்கும். அதாவது சந்தை விலையை விட ஈடிஎஃப் சில்வர் விலை அதிகமாக இருக்கும்.

இதற்கிடையே மத்திய அரசின் இந்த அறிவிப்பால் உரிமம் பெற்ற நிறுவனங்களால் மட்டுமே வெள்ளியை இறக்குமதி செய்ய முடியும். ஏற்கனவே வெள்ளியை இறக்குமதி செய்வதற்கான வரி 6%இல் 15%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது வெள்ளி பார்கள் இறக்குமதிக்கும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+