இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன..? நிதியமைச்சகம் பதில் இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வராத உலக நாடுகளுக்கு ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் அதன் மூலம் உருவான அடுத்தடுத்து பாதிப்புக்கள், விலைவாசி உயர்வு, சப்ளை செயின் பாதிப்பு ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பணவீக்க உயர்வால் போராடும் பல வல்லரசு நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையுமா என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் இந்தியாவில் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் மக்கள் உஷாராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

முதலில் இதை செய்யுங்க.. நிர்மலா சீதாராமன் போட்ட திடீர் உத்தரவு..! முதலில் இதை செய்யுங்க.. நிர்மலா சீதாராமன் போட்ட திடீர் உத்தரவு..!

மந்தமான பொருளாதார வளர்ச்சி

மந்தமான பொருளாதார வளர்ச்சி

உலக நாடுகள் ரெசிஷனுக்குப் பயந்து நடுங்கும் வேளையில் இந்தியாவில் மந்தமான பொருளாதார வளர்ச்சி (stagflation) அடுத்த சில காலங்களுக்குக் கட்டாயம் இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு, அதன் சமீபத்திய மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் (MER மே 2022), திங்கட்கிழமை வெளியிட்டது.

இந்தியா

இந்தியா

இந்த அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் மெதுவாக வளர்ச்சியைக் காணும் என்றும், ஆனால் இது மற்ற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதார நாடுகளை விடவும் சிறப்பான நிலையிலேயே இருக்கும் எனக் கணித்துள்ளதாக அறிவித்துள்ளது.

 மூன்று காலாண்டுகள்
 

மூன்று காலாண்டுகள்

2020 இன் கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் வலிமையாக மீண்டு வந்துகொண்டு இருக்கும் வேளையில், கடந்த மூன்று காலாண்டுகளில் GDP வளர்ச்சி விகிதம் சரிந்தது. இதன் அடிப்படையில் நடந்த மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வில் இந்தியப் பொருளாதாரம் மந்தமான பொருளாதார வளர்ச்சி-யை (stagflation) அடுத்தச் சில காலம் எதிர்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

ஏப்ரல்-ஜூன் 2021 இல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 20% க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் இரண்டாவது காலாண்டில் 8.5% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 5.4% ஆகவும், 2021-22 இறுதி காலாண்டில் 4.1 ஆகவும் குறைந்துள்ளது.

 முக்கியக் காரணம்

முக்கியக் காரணம்

இந்தியாவில் நிலவும் இந்த மந்தமான பொருளாதார வளர்ச்சிக்குச் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கம் தான் முக்கியக் காரணம் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூறி வருகிறது. இந்நிலையில் உலகின் பொருளாதார வளர்ச்சி 2021 இல் 5.7% லிருந்து 2022 இல் 2.9% ஆகக் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திடீர் எச்சரிக்கை.. பாகிஸ்தான், இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலி..!மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திடீர் எச்சரிக்கை.. பாகிஸ்தான், இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's slowing economic growth will stay - says finmin

India's slowing economic growth will stay - says finmin இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன..? நிதியமைச்சகம் பதில் இதுதான்..!
Story first published: Tuesday, June 21, 2022, 11:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X