கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் நடந்த ET Startup Awards 2025 நிகழ்ச்சியில், டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் தலைவர் சத்யன் கஜ்வானி கலந்து கொண்டார். அப்போது, அவர் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழல் குறித்து உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த எதிர்காலத்தை நோக்கி வேகமாகச் செல்லும்போது, புதுமை, ஆளுமை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கான தரநிலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. சவால்களை சமாளித்து, இந்தியா வேகமாக கற்றுக் கொள்கிறது, வேகமாகக் தகவமைக்கிறது மற்றும் சவால்களின் கீழ் செழித்து வளர்கிறது என்பதை இந்தச் சூழல் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றி, உலகளாவிய தொழில்நுட்ப சந்தைக்கு இந்தியா இனி ஒரு சந்தை மட்டுமல்ல என்பதை அவர் குறிப்பிட்டார். இந்த அடுத்த அலையில் நாம் உண்மையாக தலைமை தாங்க, திறமை, கணினி ஆற்றல் மற்றும் மூலதனம் ஆகியவை ஒன்றிணைந்து நீண்ட காலப் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் AI புதுமை மையங்களை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஆழமான ஆராய்ச்சி, மூலதனம் மற்றும் தொலைநோக்கு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "ஸ்டார்ட்அப்கள் இந்தியாவின் முதலீட்டு கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல், இந்திய ஸ்டார்ட்அப்கள் நாட்டின் பொதுச் சந்தைகளில் 33 ஐபிஓக்கள் (IPOs) மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக திரட்டியுள்ளன. ஆசிரியர்கள், பொறியாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், சாதாரண இந்தியர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து, தங்களது கடினமாக சம்பாதித்த சேமிப்பை ஒப்படைக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு" என்று தொழில்முனைவோருக்கு அவர் நினைவூட்டினார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "ஆழமான தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கான மூலதனத்தை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது. நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியை விரைவுபடுத்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தை நாம் அதிகமாகச் சார்ந்து இருக்கக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய Lenskart தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் பன்சல், "IPO என்பது நிறுவனத்தின் முக்கியமான மைல்கல் ஆகும். மேலும், ஒரு உலகளாவிய கண்ணாடிகள் நிறுவனத்தை உருவாக்குவது இந்தியாவின் மிகப்பெரிய கனவாக இருப்பதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்த ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்அப் விருதை வென்ற Urban Company-ன் தலைமை நிர்வாக அதிகாரி அபிராஜ் சிங் பால் கூறுகையில், "வளர்ச்சிக்கு எதிராக லாபம் என்று பார்க்காமல், லாபத்துடன் கூடிய வளர்ச்சி என்பதே இலக்கு. நீங்கள் திறமையாக இல்லாவிட்டால் வளர்ச்சியின் விலை உயர்ந்ததாகிவிடும் நீங்கள் வளரவில்லை என்றால், லாபம் அர்த்தமற்றதாகிவிடும்" என்று அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications