இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் தனிப்பட்ட செல்வம் கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இதேபோல் இளம் பணக்காரர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதேவேளையில் கோவிட்-19க்கு பின்பு பணக்காரர்களின் பயண முறைகள் பெரிய அளவில் மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை. உதாரணமாகக் கொரோனாவுக்குப் பின்பு இந்தியாவில் கார் விற்பனையும், டாக்சி பயன்பாடும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் தொற்று அச்சம் அதிகமாக இருந்த காரணத்தால் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதேபோல் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா..?
அல்ட்ரா ரிச்
பொதுவாகப் பெரும் பணக்காரர்களின் முக்கிய முதலீடாக ரயில் எஸ்டேட், ஆடம்பர கார், காஸ்ட்லியான ஆடைகள், பேஷன் பொருட்கள் ஆகியவை இருக்கும். இதுவே அல்ட்ரா ரிச் பட்டியலில் இருப்பவர்களின் தற்போதைய முக்கிய முதலீடாக இருப்பது பிரைவேட் ஜெட் தான். வர்த்தகத்திற்காகவும், பர்சனல் விஷயத்திற்காகவும் தற்போது பெரும் பணக்காரர்கள் அதிகளவில் பிரைவேட் ஜெட் வாங்கி வருகின்றனர்.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரை பறக்கக்கூடிய நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய பிஸ்னஸ் ஜெட் விமானங்களைத் தேடி இந்தியாவின் அல்ட்ரா ரிச் பணக்காரர்கள் அலைகின்றனர். கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் பல மாதங்கள் தங்கியிருந்தது மறக்க முடியாது.
கலாநிதி மாறன்
இந்த நிலையில் சன் டிவி கலாநிதி மாறன், அதானி குழுமத்தின் கௌதம் அதானி மற்றும் அவர்களின் மகன்கள், சைரஸ் மற்றும் ஆதார் பூனவாலா- இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்கள் ஆகியோர் சமீபத்தில் பெரிய தனியார் ஜெட் விமானங்களை வாங்கிய கார்ப்பரேட்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் பணக்காரர்களாகும்.
பாம்பார்டியர் குளோபல் 7500
சன் டிவி நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக நீண்ட தூர தனியார் ஜெட் விமானமான பாம்பார்டியர் குளோபல் 7500 இல் முதலீடு செய்தது. சுமார் 75 மில்லியன் டாலர் விலை கொண்ட இந்த ஜெட் விமானம் 7,700 நாட்டிகல் மைல் தூரம் செல்லும். இதன் மூலம் இந்தியா முதல் அமெரிக்கா வரை செல்ல முடியும் என எக்னாமிக்டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம்
இதேபோல் அதானி குழுமம் இந்த ஆண்டு Bombardier Global 6500 ரக விமானத்தை வாங்கியது, மேலும் Poonawallas கடந்த ஆண்டு இதே விமானத்தை வாங்கியது. இந்தப் பாம்பார்டியர் குளோபல் 6500 ஜெட் விமானத்தின் விலை 56 மில்லியன் டாலராகும். இந்த விமானம் 6,600 கடல் மைல்கள் வரம்பைக் கொண்டுள்ளது, ஐரோப்பாவை தாண்டியும் செல்ல முடியும்.
ஜிண்டால் குழுமம்
இதேபோல் நவின் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜிண்டால் குழுமம் 7,000 கடல் மைல்கள் வரம்பைக் கொண்ட கல்ஃப்ஸ்ட்ரீம் G650ER இல் முதலீடு செய்துள்ளது. இதேபிரிவில் ஃபால்கன் 8X ஐ வாங்கிய ஹீரோ குழுமமும் அடங்கும். நீண்ட தூர ஜெட் விமானங்களை வாங்கிய பிற நிறுவனங்களில் பட்டியில்ல இவ்விரு நிறுவனங்களும் சேரும்.
பில்லியனர் மக்கள் தொகை
நைட் ஃபிராங் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பில்லியனர் மக்கள் தொகை 2021 இல் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது, துல்லியமாக்கச் சொல்ல வேண்டும் என்றால் 19 சதவீதத்தில் வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் அவர்களின் சொத்து மதிப்பு 21.4 சதவீதம் அதிகரித்துள்ளது 384 பில்லியன் டாலராக உள்ளது.
கொரோனா
கொரோனா தொற்றுநோய் நோய்க்கு பின்பு தனியார் ஜெட் நிறுவனங்கள் சற்றும் எதிர்பார்க்காத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி காலத்தில் தனியார் ஜெட் இயக்கங்கள் 37 சதவீதம் அதிகரித்துள்ளன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications